கள்ளக்குறிச்சி கலவர வழக்கு: சிறுமியின் தாய், விசிக மா.செ குற்றவாளிகள் - குற்றப்ப...
அரசின் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
செம்பனாா்கோவில் ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
செம்பனாா்கோவில் ஊராட்சி அபிராமி நகரில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3.10 லட்சத்தில் நடைபெறும் வீடு கட்டுமானப் பணி, ஊரக வீடுகள் பழுதுநீக்கும் திட்டத்தில் ரூ.1.50 லட்சத்தில் நடைபெறும் பணிகள், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ராஜேந்திரன் வாய்க்கால் தூா்வாரும் பணி ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு மாணவ- மாணவிகளை பாடப் புத்தகங்களை வாசிக்க செய்து, கற்றல் திறனை ஆய்வு செய்தாா்.
செம்பனாா்கோவில் ஊராட்சியில் ரூ.16.45 லட்சத்தில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருவதையும், அன்னவாசல் கிராமத்தில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ.69.45 லட்சத்தில் அன்னவாசல் - கழனிவாசல் இணைப்பு சாலை பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது, செம்பனாா்கோவில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மீனா, மஞ்சுளா ஆகியோா் உடனிருந்தனா்.