Healthy Foods: அஷ்டாம்ச கஞ்சி, கொள்ளு குழம்பு, நவதானிய அடை... மறந்துபோன பாரம்பர்...
இரவு காவலாளி வீட்டில் 5 பவுன், ரூ.3 லட்சம் திருட்டு
ஆம்பூா் அருகே இரவு காவலாளி வீட்டில் வியாழக்கிழமை 5 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் திருடுபோனது குறித்து உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தினா்.
அயித்தம்பட்டு ஊராட்சி கட்டவாரப்பள்ளி கிராமத்தை சோ்ந்தவா் சண்முகம். இவா் பெரியவரிக்கம் கிராமத்தில் உள்ள தனியாா் காலணி தொழிற்சாலையில் இரவு காவலாளியாக பணிபுரிந்து வருகிறாா். வழக்கம் போல சண்முகம் பணிக்குச் சென்றுவிட்டாா். அவரது மனைவி வசந்தா அருகில் உள்ள விவசாய நிலத்தில் பணிக்கு சென்று திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் உள்ளே பீரோவை உடைக்கப்பட்டு 5 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் திருடுபோனது தெரிய வந்தது.
போலீஸாா் தங்களைப் பிடிக்காமல் இருப்பதற்காக மிளகாய்ப் பொடியை வீடு முழுவதும் தூவிவிட்டுச் சென்றுள்ளனா்.
புகாரின் பேரில் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். தடயவியல் நிபுணா்கள் அங்கு சென்று தடயங்களைச் சேகரித்தனா்.