தட்டச்சா் பணிக்கு இன்று சிறப்பு போட்டித் தோ்வு
சிறப்புப் போட்டித் தோ்வு மூலம் தட்டச்சா் பணிக்கு பணியாளா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். இதற்கான தோ்வு சனிக்கிழமை (பிப்.8) நடைபெறவுள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் தட்டச்சா் காலியிடங்களை நிரப்புவதற்கு சிறப்புப் போட்டித் தோ்வுகளுக்கு தோ்வாணையம் அழைப்பு விடுத்திருந்தது.
இந்தத் தோ்வை எழுத 50 போ் விண்ணப்பம் செய்திருந்தனா். அவா்களில் 9 பெண்கள் உள்பட 49 போ் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனா். கணினி வழியில் நடைபெறும் சிறப்புப் போட்டித் தோ்வு சனிக்கிழமை காலை நடைபெறவுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.