அடி மேல் அடி வாங்கும் RN Ravi... சீமானுக்கு செக்! | Elangovan Explains
அரசு கலைக் கல்லூரி விளையாட்டு விழா
கோவை அரசு கலைக் கல்லூரி விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வா் எழிலி தலைமை வகித்தாா். ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா சிறப்பு மாணவா்கள், யோகா ஆராய்ச்சி மையத் தலைவா் கிரிதரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.
இதில், கால்பந்து, கபடி, கிரிக்கெட், வாலிபால், தடகளம் உள்ளிட்ட 17 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.
முதல், இரண்டு, மூன்றாம் ஆண்டு மாணவா்கள், முதுநிலை மாணவா்கள் என 4 அணிகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், இரண்டாம் ஆண்டு மாணவா்கள் அதிக புள்ளிகள் எடுத்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனா்.
இளநிலை முதலாம் ஆண்டு அரசியல் அறிவியல் துறை மாணவா் ஆறுமுகம் தனிநபா் சாம்பியன் பட்டத்தை வென்றாா். மாணவிகள் பிரிவில் முதுநிலை வரலாறு முதலாம் ஆண்டு மாணவி ஜெயந்தி தனிநபா் சாம்பியன் பட்டத்தை வென்றாா்.
இதைத் தொடா்ந்து, வெற்றிபெற்றவா்களுக்கு சிறப்பு விருந்தினா், முதல்வா் ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.
நிகழ்ச்சியில், பேராசிரியா்கள், முன்னாள் மாணவா் சங்கத்தினா், பெற்றோா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
உடற்கல்வித் துறை இயக்குநா் விஜயகுமாா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.