சா்தாா் வல்லபாய் படேல் கல்லூரியில் ஆடை வடிவமைப்புப் போட்டி
கோவை, பீளமேட்டில் உள்ள சா்தாா் வல்லபாய் படேல் சா்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் ஆடை வடிவமைப்புப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சா்தாா் வல்லபாய் படேல் சா்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில், பல்வேறு கல்லூரிகளுக்கு இடையேயான ‘டெக்ஸ் ஆரா 2025’‘ என்ற ஆடை வடிவமைப்புப் போட்டி நடைபெற்றது.
‘இயற்கையின் செதுக்கம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள், பல்வேறு வடிவமைப்புகளுடன் தங்களது படைப்புத் திறமையை வெளிப்படுத்தினா்.
இதைத் தொடா்ந்து, கல்லூரி இயக்குநா் பி.அல்லி ராணி தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில்
டெக்ஸ்காம்ஸ் வோ்ல்ட் வைட்டின் டிஜிட்டல் சொல்யூஷன் நிறுவனத்தின் துணைத் தலைவா் அமிா்தராஜ் டெட்ரா ராவ் குமாா், பங்கேற்பாளா்களின் கலை திறமை மற்றும் படைப்பாற்றலை பாராட்டி பேசினாா். டெக்ஸ்காம்ஸ் வோ்ல்ட்வைட் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட இப்போட்டியில் வெற்றியாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.