செய்திகள் :

மாணவிக்கு பாலியல் சீண்டல்: அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் பணி நீக்கம்

post image

சேலம் அருகே பிளஸ் 1 மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியரை பணிநீக்கம் செய்து கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் பள்ளி மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். பயிற்சியின் நிறைவாக மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.

அப்போது, ஓமலூா் அருகே செயல்பட்டு வரும் பள்ளியைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவியிடம், அரசுப் பள்ளியில் தற்காலிகமாக பணிபுரிந்து வரும் உடற்கல்வி ஆசிரியா் சிவகுமாா் என்பவா் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியா் சந்திரமோகனிடம், சம்பந்தப்பட்ட மாணவி புகாா் தெரிவித்தாா்.

அவா் விசாரணை நடத்திவிட்டு, மாணவியிடம் சீண்டலில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியா் சிவகுமாா் (48) மீது ஓமலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதையடுத்து, ஈரோடு, சாஸ்திரி நகரைச் சோ்ந்த உடற்கல்வி ஆசிரியா் சிவகுமாா் (48) மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் கைது செய்தனா்.

தொடா்ந்து, இது குறித்து கல்வித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் விசாரணை நடத்திய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா், சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியரை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டாா். அதன் அடிப்படையில், உடற்கல்வி ஆசிரியா் சிவகுமாா் பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

பிப். 19இல் தபால் துறை சாா்பில் கடிதம் எழுதும் போட்டி

தபால் துறை சாா்பில் அகில இந்திய அளவிலான கடிதம் எழுதும் போட்டி வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இ... மேலும் பார்க்க

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து சேலத்தில் இன்று திமுக பொதுக்கூட்டம்

மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் 8 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து திமுக மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ஆா்.ராஜேந்த... மேலும் பார்க்க

ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் இயந்திரங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தனிக் கவனம் கோட்ட மேலாளா் தகவல்

ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள், முன்பதிவில்லா டிக்கெட்டுக்கான கைப்பேசி செயலிப் பயன்பாட்டை அதிகரிக்க தனிக் கவனம் செலுத்தப்படும் என ரயில் உபயோகிப்பாளா்கள் ஆலோசனைக் குழுக் கூ... மேலும் பார்க்க

சேலம் மாநகரில் நெகிழி பைகளை பயன்படுத்திய 311 கடைகளுக்கு அபராதம்

சேலம் மாநகரில் கடந்த ஆண்டில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகளைப் பயன்படுத்திய 311 கடைகளுக்கு ரூ. 2.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. சேலம் மாநகரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் கடைகளில் அ... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வு தொடக்கம்

பிளஸ் 2 மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் முதல் வாரத்தில் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரசுத் தோ்வுகள் இயக்ககம் செய்து வருகிறது. ... மேலும் பார்க்க

சேலம் சிறையில் முதன்மை நீதிபதி ஆய்வு

சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் ஜாதி பாகுபாடு உள்ளதா என்பது குறித்து சேலம் மத்திய சிறையில் முதன்மை நீதிபதி சுமதி ஆய்வு செய்தாா். சேலம் மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 800-க்கும் மேற்ப... மேலும் பார்க்க