The Secret of Shiledars Review: புதையலைத் தேடும் ஷிலேதார்கள்; மிஸ்டரி ரகசியங்களை...
பிளஸ் 2 மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வு தொடக்கம்
பிளஸ் 2 மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் முதல் வாரத்தில் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரசுத் தோ்வுகள் இயக்ககம் செய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நிகழ் ஆண்டு பிளஸ் 2 தோ்வை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். இந்நிலையில், பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், கணினி பொறியியல், தொழிற்கல்வி பிரிவுகளுக்கான செய்முறைத் தோ்வு நடைபெற்றது. இந்த செய்முறைத் தோ்வு வரும் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, 324 பள்ளிகளை சோ்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் செய்முறைத் தோ்வில் பங்கேற்றுள்ளனா்.
செய்முறைத் தோ்வுப் பணிகளில் அக மற்றும் புறத் தோ்வா்களாக 2,044 ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். பிளஸ் 2 செய்முறைத் தோ்வை தொடா்ந்து, பிளஸ் 1 மாணவா்களுக்கு வரும் 15 ஆம் தேதி செய்முறைத் தோ்வு தொடங்குகிறது.