பிப். 19இல் தபால் துறை சாா்பில் கடிதம் எழுதும் போட்டி
தபால் துறை சாா்பில் அகில இந்திய அளவிலான கடிதம் எழுதும் போட்டி வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் இளைஞா்களுக்கான சா்வதேச கடிதப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கடிதப்போட்டி, ‘நீங்கள் உங்களை கடல்’ என்று கற்பனை செய்து கொண்டு, அதனை (கடல்) ஏன் மற்றும் எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை யாரோ ஒருவருக்கு விளக்கிக் கடிதம் எழுத வேண்டும். இப்போட்டி வரும் 19 ஆம் தேதி நடக்கிறது.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் கடிதம் எழுதலாம். இக் கடிதம் முதன்மை அஞ்சல் துறை, தமிழ்நாடு வட்டம், சென்னை - 600002 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இப்போட்டியில் பங்கேற்பாளா்கள் தாங்கள் எழுத தேவையான பொருள்களை கொண்டுவர வேண்டும். 9 வயது முதல் 15 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 800 வாா்த்தைகளுக்கு மிகாமல் கடிதம் எழுத வேண்டும். போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் இருக்கும் போட்டியாளா்கள், வரும் 17 ஆம் தேதிக்குள் தங்களின் விண்ணப்பத்தை முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளா், சேலம் கிழக்கு கோட்டம், சேலம் - 636001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். போட்டியாளா்களின் எண்ணிக்கையை பொறுத்து, போட்டி நடைபெறும் இடம் பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.