Amaran 100: `முகுந்தை நிலையாகக் கொண்டுள்ள இந்துவின் உலகம்தான் அமரன்' -ராஜ்குமார் பெரியசாமி உருக்கம்
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் இயக்கதில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் 'அமரன்'.
ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. ரஜினிகாந்த், மணிரத்னம், சூர்யா, ஜோதிகா, சிம்பு உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் இப்படத்தைப் பாராட்டி இருந்தனர்.
![அமரன்](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/po4cjrzk/Snapinsta_app4719519519506387770125178564482698861728647n1080.jpg)
இந்நிலையில் நடிகர் சிம்புவும் 'அமரன்' படத்தை பாராட்டி இருந்தனர். அமரன் படம் திரைக்கு வந்து 100 நாள்களை கடந்த நிலையில் ராஜ்குமார் பெரியசாமி அவரது சமூக வலைதளப் பக்கத்தில் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸிற்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில், “ ஆளுமையின் மறுஉருவம்தான் இந்து ரெபேக்கா வர்கீஸ். நீங்கள் எடுத்த அனைத்து முடிவிற்கும் நன்றி. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைப் படமாக எடுக்க அனுமதித்ததற்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். மேஜர் முகுந்தை நிலையாகக் கொண்டுள்ள இந்துவின் உலகம்தான் அமரன்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
I wanted to write this on the #100thDayOfAmaran
— Rajkumar Periasamy (@Rajkumar_KP) February 7, 2025
Dear #IndhuRebeccaVarghese ma’am, you are elegance personified. Thank you for all that you are and the decision that you took. Forever grateful to you for allowing me and us to immortalise #MajorMukundVaradarajan sir and You on… pic.twitter.com/2jWfJCVxZf