2 இளைஞர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை - அரக்கோணம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் த...
பால் டேங்கா் லாரி கவிழ்ந்து இருவா் உயிரிழப்பு
உத்தனப்பள்ளி அருகே சாலையோரத்தில் பால் டேங்கா் லாரி கவிழ்ந்ததில் இருவா் உயிரிழந்தனா்.
பெங்களூரிலிருந்து கேரளத்துக்கு 28 ஆயிரம் லிட்டா் பாலுடன் வியாழக்கிழமை இரவு சென்ற லாரியை நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் (32) ஓட்டிச் சென்றாா். அவருடன் அருள் (27) என்பவரும் லாரியில் பயணம் செய்தாா்.
உத்தனப்பள்ளியை அடுத்த கரடிகுட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ராஜேஷ்குமாா், அருள் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். சேதமடைந்த டேங்கரிலிருந்த பால் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
உத்தனப்பள்ளி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து உயிரிழந்தவா்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
படவரி....
விபத்துக்குள்ளான லாரி.