செய்திகள் :

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தை கடைசி வெள்ளி திருவிழா -நேர்த்திக்கடனை நிறைவேற்றிய பக்தர்கள்!

post image

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்றது. இந்த கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். குறிப்பாக சித்திரை, ஆடி, தை, பங்குனி உள்ளிட்ட மாதங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்வர். இதில் தை மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு, இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெறும். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக கோயிலுக்கு வருவர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.

அக்னிச்சட்டி

தென் மாவட்டங்களான தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர். இந்தநிலையில் தை மாத கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு 16 வகை திவ்ய பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை மற்றும் பூஜைகளும் நடைபெற்றது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் அம்மனை வேண்டி , அக்கினிச்சட்டி, மாவிளக்கு, பறக்கும்காவடி, தேர்இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

கோவில்

கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக நவீன கழிப்பறை, குளியல் தொட்டி, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, மருத்துவ வசதிக்கான சுகாதார மையங்கள், மற்றும் பாதுகாப்பு வசதிக்காக ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. திருவிழா ஏற்பாடுகளை இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, கோவில் செயல் அலுவலர் இளங்கோ மற்றும் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோயில் அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தோரணமலை தைப்பூசம்: உங்கள் வேண்டுதல்கள் யாவையும் நிறைவேற்றி வைக்கும் முருக வழிபாடு! சங்கல்பியுங்கள்

தோரணமலை தைப்பூசம்: உங்கள் வேண்டுதல்கள் யாவையும் நிறைவேற்றி வைக்கும் முருக வழிபாடு! சங்கல்பியுங்கள்! 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப பூஜைகள்... மேலும் பார்க்க

எல்லாப் பிணியும் நில்லாதோட... தோரணமலை தைப்பூசம்! விரும்பிய வாழ்க்கை உடனே அமைய சங்கல்பியுங்கள்!

எல்லாப் பிணியும் நில்லாதோட தோரணமலை தைப்பூசம்! விரும்பிய வாழ்க்கை உடனே அமைய சங்கல்பியுங்கள்! வரும் 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப பூஜைகள் ந... மேலும் பார்க்க

ரூ.6 கோடி மதிப்பு.. 6.8 கிலோ தங்கத்தில் கன்னியாகுமரி அம்மன் விக்கிரகம்- அர்ப்பணித்த கேரள தொழிலதிபர்!

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோயில் வரலாற்று சிறப்பு வாய்ந்த திருத்தலமாகும். கன்னியாகுமரி பகவதி அம்மனின் ஒளிவீசும் மூக்குத்திக்கு என தனி முக்கியத்துவம் உ... மேலும் பார்க்க

வாழ்த்துங்களேன்!

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்... இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்! அன்பார்ந்த வாசகர்களே!உங்கள் சக்தி விகடன் 21-ம... மேலும் பார்க்க

800 ஆண்டுகள் பழமையான கோயிலில் தூய்மைப்பணி; 62 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய தெப்பக்குளம் | Photo Album

குளத்தில் நீர் நிரம்பியதுகதலி நரசிங்க பெருமாள் கோயில் தெப்பக்குளம்குளத்தில் நீர் நிரம்பியதுகுளத்தில் நீர் நிரம்பியதுகதலி நரசிங்க பெருமாள் கோயில் தெப்பக்குளம்கதலி நரசிங்க பெருமாள் கோயில் தெப்பக்குளம்கத... மேலும் பார்க்க

`பகை விலக்கி பலம் சேர்க்கும்' தைப்பூச மகாசங்கல்ப பூஜை தோரணமலையில் 7 அபூர்வ பலன்கள்; சங்கல்பியுங்கள்

பகை விலக்கி பலம் சேர்க்கும் தைப்பூச மகாசங்கல்ப பூஜை தோரணமலையில்! 7 அபூர்வ பலன்கள்! சங்கல்பியுங்கள்! வரும் 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப ப... மேலும் பார்க்க