செய்திகள் :

தோரணமலை தைப்பூசம்: உங்கள் வேண்டுதல்கள் யாவையும் நிறைவேற்றி வைக்கும் முருக வழிபாடு! சங்கல்பியுங்கள்

post image

தோரணமலை தைப்பூசம்: உங்கள் வேண்டுதல்கள் யாவையும் நிறைவேற்றி வைக்கும் முருக வழிபாடு! சங்கல்பியுங்கள்! 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப பூஜைகள் நடைபெற உள்ளன.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

தோரணமலை முருகன்

கலியுகத்தின் கண் கண்ட தெய்வம் முருகன். சகல தெய்வங்களுக்கும் விருப்பமான முருகப்பெருமானை வணங்கினால் எல்லா நலங்களும் வளங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை. குன்றுதோறும் குடிகொண்ட முருகப்பெருமான் தோரணமலையில் சித்தர்கள் புடைசூழ அருளாசி செய்து கொண்டிருக்கிறான். முருக வழிபாடு வரலாற்று காலத்துக்கும் முந்தையது. திருமுருகாற்றுப்படை, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களும் முருகனைப் போற்றுகின்றன. குறிஞ்சி நிலக்கடவுளாக வணங்கப்பட்ட முருகனை 'சேயோன் மேய மைவரை உலகமும்' என்று போற்றுகிறது தொல்காப்பியம்.

முருக வழிபாட்டுக்கும் முந்தையது வேல் வழிபாடு. வேலைக் கொண்டு வெற்றிகளைக் குவித்த குறிஞ்சி நிலத்தலைவனே முருகன் என்ற கடவுள் என்றும் கருத்தும் உண்டு. முருகன் உலகின் மூத்த தலைவனாகவும் முதல் வழிபாடாக முருக வழிபாடு விளங்குவதாகவும் வரலாறு கூறுகிறது.

உலகெங்கும் கொண்டாடப்படும் முருகப்பெருமானை தைப்பூசத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பானது. அதிலும் இந்த ஆண்டு செவ்வாய்க்கிழமையில் தைப்பூசம் வருவது கூடுதல் சிறப்பு.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

சிறப்பான தைப்பூச நாளில் விரதம் இருந்து, முருகனை வணங்குங்கள். தோரணமலைக்கு நேரில் சென்றோ அல்லது அவரவர் வீட்டிலோ நெய்தீபம் ஏற்றி வைத்துத் தோரணமலையானை வணங்குங்கள். அவனருளால் கவலையில்லாத வாழ்க்கை வரமாகக் கிடைக்கும். உங்களின் வாழ்வு சிறப்பாக மலர சக்தி விகடன் இந்த ஆண்டு தைப்பூசத்தில் மகா சங்கல்ப விழாவை நடத்தி வைக்கிறது. வரும் 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப பூஜைகள் நடைபெற உள்ளன.

தோரணமலை

முருகனுக்கு உகந்த தைப்பூச நன்னாளில் இங்கு முருகனை பூஜித்து சங்கல்பித்துக் கொண்டால் சகல நோய்களும் தீரும்; 16 வகை செல்வங்களும் சேரும். நீண்ட ஆயுளும் நீடித்த ஆரோக்கியமும் பெறலாம் என்பது நிச்சயம். மேலும் கவலைகளும் தரித்திரமும் நீங்கி, ஆனந்தமும் ஐஸ்வர்யமும் கூடும். குறிப்பாக தடைபட்ட மங்கல காரியங்கள் நடைபெறும் என்பது விசேஷம்.

தைப்பூச மகாசங்கல்பத்தில் கலந்துகொண்டு பிரார்த்தித்தால் முருகப்பெருமானின் அருளால் பல வித நலன்களை அடையலாம் என்கிறது தலவரலாறு. தைப்பூசத்தில் மனமகிழ்ந்து நடமாடும் முருகப்பெருமான், நிச்சயம் உங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவான் என்பது நிச்சயம். ஞானமே வடிவமான ஞான பண்டிதன் உங்களுக்கு ஞானமும் நல்வித்தையும் அருளுவான்.

தேவர் தலைவனாம் கந்தன் நீங்கள் விரும்பிய உயர் பதவிகளை அடைய நிச்சயம் அருளுவான். எதிரிகளைப் பொடிப்பொடியாக்கும் வெற்றி வேல் முருகன், மலையென வரும் துன்பம் பனியென நீங்க வைப்பான் என்பதும் நிச்சயம். வசீகர அழகனாம் குமரனை வணங்கினால் அனைத்தும் வசமாக அருளுவான். வள்ளி தெய்வானை மணாளனாம் முருகப்பெருமானின் அருள் பெற்றால் இல்வாழ்க்கையில் இன்பம் பெறலாம் என்பதும் ஐதிகம். அறுபடை வீடுகளில் நிலைபெற்று அருளும் ஆறுமுகனின் அருளால் வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாகும். ஆரோக்கியமும் ஆயுளும் கூடி எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க கந்தனின் அருள் நிச்சயம் உதவும்.

இந்த தோரணமலை மகாசங்கல்ப விழாவில் நீங்களும் பதிவு செய்து பலன் பெறுங்கள்!

தைப்பூச நன்னாளான பிப்ரவரி 11-ம் நாள் (2025) பல ஆராதனைகள் விமரிசையாக நடைபெற உள்ளது. அதிகாலை 5 மணிக்கு கணபதி ஆராதனை தொடங்கி, மூலவர் – உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், திருக்கல்யாணம், வீதி உலா, போன்ற வைபவங்கள் நடைபெற உள்ளன. விழாவின் சிறப்பாக இந்திய நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகள், இந்தியப்போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், உழவர் பெருமக்கள், சாதனை புரிந்த நல்லோர் என விசேஷமான அன்பர்களுக்கு பாராட்டும் மரியாதையும் செய்யப்பட உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், அவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் போன்றவையும் அன்னதானமும் நடைபெற உள்ளன.

தோரணமலை முருகன்

வாசகர்களின் கவனத்துக்கு!

இந்த சங்கல்ப வழிபாட்டில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்குப் பிரசாதமாக விபூதி, ரட்சை மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். வாசகர்கள், இந்த வழிபாட்டு வைபவங்களை சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் வீடியோ வடிவில் தரிசிக்கலாம்.

குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.

qr code for thoranmalai event registration

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

எல்லாப் பிணியும் நில்லாதோட... தோரணமலை தைப்பூசம்! விரும்பிய வாழ்க்கை உடனே அமைய சங்கல்பியுங்கள்!

எல்லாப் பிணியும் நில்லாதோட தோரணமலை தைப்பூசம்! விரும்பிய வாழ்க்கை உடனே அமைய சங்கல்பியுங்கள்! வரும் 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப பூஜைகள் ந... மேலும் பார்க்க

ரூ.6 கோடி மதிப்பு.. 6.8 கிலோ தங்கத்தில் கன்னியாகுமரி அம்மன் விக்கிரகம்- அர்ப்பணித்த கேரள தொழிலதிபர்!

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோயில் வரலாற்று சிறப்பு வாய்ந்த திருத்தலமாகும். கன்னியாகுமரி பகவதி அம்மனின் ஒளிவீசும் மூக்குத்திக்கு என தனி முக்கியத்துவம் உ... மேலும் பார்க்க

வாழ்த்துங்களேன்!

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்... இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்! அன்பார்ந்த வாசகர்களே!உங்கள் சக்தி விகடன் 21-ம... மேலும் பார்க்க

800 ஆண்டுகள் பழமையான கோயிலில் தூய்மைப்பணி; 62 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய தெப்பக்குளம் | Photo Album

குளத்தில் நீர் நிரம்பியதுகதலி நரசிங்க பெருமாள் கோயில் தெப்பக்குளம்குளத்தில் நீர் நிரம்பியதுகுளத்தில் நீர் நிரம்பியதுகதலி நரசிங்க பெருமாள் கோயில் தெப்பக்குளம்கதலி நரசிங்க பெருமாள் கோயில் தெப்பக்குளம்கத... மேலும் பார்க்க

`பகை விலக்கி பலம் சேர்க்கும்' தைப்பூச மகாசங்கல்ப பூஜை தோரணமலையில் 7 அபூர்வ பலன்கள்; சங்கல்பியுங்கள்

பகை விலக்கி பலம் சேர்க்கும் தைப்பூச மகாசங்கல்ப பூஜை தோரணமலையில்! 7 அபூர்வ பலன்கள்! சங்கல்பியுங்கள்! வரும் 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப ப... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகப் பணிகள்; பழமை மாறாமல் பொருத்தப்பட்ட 9 கலசங்கள்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேச நாள்களி... மேலும் பார்க்க