ரஞ்சி டிராபி: காலிறுதிக்கான மும்பை அணியில் சூர்யகுமார், துபேவுக்கு இடம்!
எல்லாப் பிணியும் நில்லாதோட... தோரணமலை தைப்பூசம்! விரும்பிய வாழ்க்கை உடனே அமைய சங்கல்பியுங்கள்!
எல்லாப் பிணியும் நில்லாதோட தோரணமலை தைப்பூசம்! விரும்பிய வாழ்க்கை உடனே அமைய சங்கல்பியுங்கள்! வரும் 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப பூஜைகள் நடைபெற உள்ளன.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
தோரணமலை முருகன் கோயில், தென்காசி மாவட்டம், கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஆரம்ப குன்றாக அமைந்துள்ளது. அகத்தியர், தேரையர் உள்ளிட்ட சித்தர்களின் தொடர்பு கொண்டும், அவர்களின் சித்து வேலைகள் மற்றும் அதிர்வலைகள் நிறைந்ததாகவும் இம்மலை பல ஆயிரம் ஆண்டுகளாக விளங்கி வருகிறது.
அகத்தியரிடம் சில வர்ம முறைகளைக் கற்றுக் கொள்ள ஸ்ரீராமர் தனது இளவளோடு இங்கு வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. மஹாபாரதக் காலத்தில் ஆரவல்லி சூரவல்லி கதையோடு இம்மலை தொடர்பு கொண்டுள்ளது. தேரையரை அகத்தியர் இங்கே அடக்கி அவரை சீடராக்கிக் கொண்டார் என இத்தல வரலாறு கூறுகிறது. அகத்தியர் உள்ளிட்ட பல சித்தர்களின் முயற்சியால் தோரணமலை ஒரு பிரமாண்ட சித்த மருத்துவச் சாலையாகவும் மருத்துவப் பல்கலைக் கழகமாகவும் விளங்கி வந்தது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேசமெங்கும் வந்திருந்து இங்கு பயின்றனர் என்கிறது வரலாறு. அகத்தியரோடு தங்கிய தேரையர் இங்கேயே ஜீவசமாதியும் அடைந்தார் என்று கூறப்படுகிறது. இன்றும் இங்கே அரூபமாக உலாவும் சித்தர்களை பலரும் தரிசித்ததாக கூறுகிறார்கள்.
தோரணமலையில் ஆயிரக்கணக்கான அரியவகை மூலிகைகளைக் கண்ட அகத்தியர் முருகப்பெருமானின் வழிகாட்டலின்படி இங்கே ஒரு மாபெரும் மருத்துவச்சாலையை உருவாக்கி பல சீடர்களை உருவாக்கினார். இங்கு அகத்தியருக்குக் காட்சி தந்த தோரணமலை முருகப்பெருமான் அகத்தியருக்கு ஆலோசனை அளித்து அந்த இடத்தில் மாபெரும் மருத்துவ கலாசாலையை நிறுவச் செய்து 72 விதமான பாட வகுப்புகளையும் உருவாக்கித் தந்தார் என தலபுராணம் கூறுகின்றது.
அநேக மூலிகைகளையும் அற்புதமான இயற்கை வளங்களையும் கொண்டுள்ள இம்மலையை மகாகவி பாரதியார் மனம் மகிழ்ந்து பாடியுள்ளார். அநேக இறைப்பணிகளோடு கல்விப்பணியையும் மேற்கொண்டு வரும் இக்கோயில் நிர்வாகம், இந்த ஆண்டு 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப பூஜைகள் நடைபெற உள்ளன.
புராணங்களும் ஞானநூல்களும் போற்றும் புண்ணிய தினங் களில் மிக முக்கியமானது தை மாதம் பூச நட்சத்திர நன்னாள். ஒரு தைப்பூசத் திருநாளில்தான் முதலில் நீரும், அதிலிருந்து உலகமும் உயிர்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன
தைப்பூசத் திருநாளில் சுப காரியங்கள் செய்தால் தம்பதிகள், வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்வார்கள் என்பது முன்னோர் தரும் வழிகாட்டல்.
பூச நட்சத்திரத்தின் பிரதான தேவதை குருபகவான். கோள்களில் ஞானம் தருபவர் குருபகவான். அதுபோல் நட்சத்திரங்களிலும், பூச நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. ஆதலால், தைப்பூசத் திருநாளில் புனித நீராடுவதும், குருபகவானாகிய பிரகஸ்பதியையும், உலகுக்கே குருவாகத் திகழும் தட்சிணாமூர்த்தி பகவானையும் வழிபடுதல் போற்றப்படுகிறது.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
முருகனுக்கு உகந்த தைப்பூச நன்னாளில் இங்கு முருகனை பூஜித்து சங்கல்பித்துக் கொண்டால் சகல நோய்களும் தீரும்; 16 வகை செல்வங்களும் சேரும். நீண்ட ஆயுளும் நீடித்த ஆரோக்கியமும் பெறலாம் என்பது நிச்சயம். மேலும் கவலைகளும் தரித்திரமும் நீங்கி, ஆனந்தமும் ஐஸ்வர்யமும் கூடும். குறிப்பாக தடைபட்ட மங்கல காரியங்கள் நடைபெறும் என்பது விசேஷம்.
வாசகர்களின் கவனத்துக்கு!
இந்த சங்கல்ப வழிபாட்டில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்குப் பிரசாதமாக விபூதி, ரட்சை மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். வாசகர்கள், இந்த வழிபாட்டு வைபவங்களை சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் வீடியோ வடிவில் தரிசிக்கலாம்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07