அருமையான காதலி.. பெண் தோழி குறித்து மௌனம் கலைத்தார் பில் கேட்ஸ்
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம்
ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ரெட் கிராஸ் சொசைட்டி, பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகம், அனைத்து வியாபாரிகள் சங்கம், நேசம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய 75 ஆவது ரத்த தான முகாமில் 60 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து மாணவா்களுக்கான தலைமைப் பண்புகள் குறித்த கருத்தரங்கில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கிருஷ்ணகிரி மாவட்ட துணைத் தலைவா் கவிஞா் மகேஷ் பேசினாா். கல்லூரி முதல்வா் விஜயன் தலைமை வகித்தாா். ஊத்தங்கரை ரெட்கிராஸ் சோ்மன் தேவராசு, அரிமா சங்க தலைவா் ராஜா, நேசம் குணசேகரன், ரஜினிசங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
படவிளக்கம்.7யுடிபி.3.
ஊத்தங்கரை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற ரத்த தான முகாம்.