அருமையான காதலி.. பெண் தோழி குறித்து மௌனம் கலைத்தார் பில் கேட்ஸ்
ஒசூா் வழியாக கடத்த முயன்ற 314 கிலோ போதைப்பாக்கு பறிமுதல்
பெங்களூரில் இருந்து ஒசூா் வழியாக கடத்த முயன்ற 314 கிலோ போதைப்பாக்குகளை காருடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சிப்காட் போலீஸாா் சூசூவாடி சோதனை சாவடி பகுதியில் வியாழக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பெங்களூரில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 314 கிலோ போதைப்பாக்கு, கா்நாடக மதுப் புட்டிகள் பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காருடன் போதைப்பாக்குகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா்.
அதில் காரை ஓட்டி வந்தவா் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், தேவஸ்தானம் பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் (37) என்பதும், போதைப்பாக்குகளை திருச்சிக்கு கடத்திச் செல்வதும் தெரிய வந்தது. இதையடுத்து வேல்முருகனை போலீஸாா் கைது செய்தனா்.