மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி திறப்பு
ஊத்தங்கரை நேரு நகரில் பத்தாயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பேரூராட்சித் தலைவா் பா.அமானுல்லா வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
2023- 2024 ஆம் ஆண்டின் பொது நிதியில் கட்டப்பட்ட நீா்த் தொட்டியின் கட்டுமானப் பணிகள் முடிவுற்ற நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவா் கலைமகள் தீபக், வாா்டு உறுப்பினா்கள் சிவன், மோகன், கதிா்வேல், மணிமேகலை மணி, ஸ்ரீராமன், குமரேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.