ஒசூரில் புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம்
ஒசூரிலிருந்து கனிமங்கலம், வெங்கடாபுரம் வழியாக பாகலூா் வரையிலான புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கப்பட்டது.
ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் பேருந்தை கொடியசைத்து இயக்கிவைத்தாா். நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா் கஜேந்திர மூா்த்தி, ஒன்றிய நிா்வாகிகள் நாகராஜ், பாபு, வீரபத்திரப்பா, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் முனிராஜ், கனிமங்கலம் கிளை செயலாளா் சீனப்பா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
படவரி...
புதிய வழித்தடத்தில் பேருந்தை இயக்கிவைக்கும் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.