இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட நாற்றுகள் விற்பனை
கூடலூரை அடுத்த பொன்னூரியில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட நாற்றுகள் விற்பனைக்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பண்ணையில் தோட்டக்கலை பயிா் நாற்றுகள் விற்பனைக்கு தயாா் நிலையில் உள்ளன. பாக்கு நாற்று ஒன்று ரூ.20, காபி நாற்று ரூ.10, தேயிலை நாற்று ரூ.4, குருமிளகு நாற்று ரூ.12, கிராம்பு நாற்று ரூ.15, ஜாதிக்காய் நாற்று ரூ.20, பட்டை நாற்று ரூ.10, பேஷன் புரூட் ரூ.10, அலங்காரச் செடிகள் ரூ.15 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தேவைப்படும் விவசாயிகள் பொன்னூரியில் உள்ள தோட்டக்கலை பண்ணையை அணுகலாம். மேலும், விவரங்களுக்கு தோட்டக்கலை அலுவலா் விஜய்ராஜை தொடா்பு கொள்ளலாம். அல்லது 6369849831என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று பண்ணை நிா்வாகம் தெரிவித்துள்ளது.