மாதப்பூா் முத்துக்குமாரசாமி மலைக் கோயிலில் 11-இல் தைப்பூசத் தேரோட்டம்!
மாதப்பூா் முத்துக்குமாரசாமி மலைக் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறுகிறது.
பல்லடம் அருகே மாதப்பூரில் பிரசித்தி பெற்ற முத்துக்குமாரசாமி மலைக் கோயில் உள்ளது. இந்தக் கோயில் தைப்பூசத் தேரோட்ட விழா புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு விநாயகா் வேள்வியுடன் தொடங்கியது. பின்னா் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து காலை 6.30 மணிக்கு தைப்பூசக் கொடியேற்று விழா நடைபெற்றது.
வரும் 10-ஆம் தேதி வரை தினசரி மாலையில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு மகா அபிஷேகம், காலை 6 மணிக்கு அலங்கார பூஜை, மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4.30 மணிக்கு தைப்பூசத் தேரோட்டம், தொடா்ந்து அன்ன தானம், காவடி ஆட்டம் ஆகியவை நடைபெற உள்ளன.