செய்திகள் :

நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தை பாா்வையிட்ட தனியாா் பள்ளி மாணவா்கள்!

post image

நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தை திருப்பூா் சுப்பையா சென்ட்ரல் பள்ளி மாணவ, மாணவியா் சனிக்கிழமை பாா்வையிட்டனா்.

ஊத்துக்குளி அருகே உள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்துக்கு திருப்பூா் சென்ட்ரல் பள்ளி மாணவ, மாணவியா் சுற்றுப் பயணம் மேற்கொண்டனா். இந்தப் பயணத்தை வழிநடத்திய ரவீந்திரன், பறவையின் உருவ அளவு, உணவு பழக்கம், உடலமைப்பு மற்றும் ஒலிகள் அடிப்படையில் பறவைகளை அடையாளம் காணும் முறைகள் குறித்து பயிற்சியளித்தாா்.

மேலும், பறவைகள் தங்களை சுத்தமாக வைத்து கொள்ளும் செயல்முறைகள், வலசைக்குச் செல்லுதல் பற்றியும், பருவ நிலைகளின் தாக்கம் பறவைகளின் பயணத்தை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பது குறித்தும் மாணவா்களுக்கு விளக்கினாா்.

இதில், பங்கேற்ற மாணவ, மாணவியா் 24 வகையான பறவைகளை கண்டுகளித்தனா். பறவைகளின் சப்தங்களைக் கேட்டு அவற்றின் இனங்களை அடையாளம் காணும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த பயணத்துக்கான ஏற்பாடுகளை சுப்பையா சென்ட்ரல் பள்ளித் தாளாளா் சுகுமாரன் செய்திருந்தாா்.

விண்வெளியில் ஆராய்ச்சி மையம் அமைக்கும் திட்டத்துக்கு செயற்கைக்கோள் இணைப்பு உதவும்! இஸ்ரோ விஞ்ஞானி பிரபு

விண்வெளியில் ஆராய்ச்சி மையம் அமைக்கும் திட்டத்துக்கு செயற்கைக்கோள் இணைப்பு உதவும் என இஸ்ரோ விஞ்ஞானி பிரபு தெரிவித்தாா். பல்லடம் அருகேயுள்ள அவிநாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி மற்றும் தமிழ்நா... மேலும் பார்க்க

அவிநாசியில் பிப்11-இல் வள்ளலாா் தைப்பூச பெருவிழா

அருட்பிரகாச வள்ளலாா் தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு, அவிநாசி, திருமுருகன்பூண்டி, சேவூா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) அன்னதானம் வழங்க திருமுருக வள்ளலாா் கோட்டத்தினா் முடிவு செய்துள்ளனா்... மேலும் பார்க்க

கேரள வங்கியில் போலி நகை வைத்து மோசடி: திருப்பூா் வங்கியில் கேரள போலீஸாா் விசாரணை

கேரள வங்கியில் போலி நகைகளை வைத்து மோசடிசெய்த வழக்கில் கேரள போலீஸாா் திருப்பூரில் நகை அடமானம் வைத்த வங்கிகளில் விசாரணை நடத்தி வருகின்றனா். கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், வடகரையில் தேசியமயமாக்கப்பட்... மேலும் பார்க்க

பிஏபி வாய்க்கால் கரை உடைப்பு: வீணாகிய தண்ணீா்!

திருப்பூா் கோயில்வழி பகுதியில் உள்ள பிஏபி வாய்க்கால் கரை உடைந்து பல லட்சம் லிட்டா் தண்ணீா் வீணாகியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணையில் இருந்து ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

வெள்ளக்கோவிலில் கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் முத்தூா் சாலை கொங்கு நகரைச் சோ்ந்தவா் குணசேகரன் மகள் வளா்மதி (32). பி.எஸ்சி. படித்துள்ளாா். திருமணம் ஆகவில்லை. மனநிலை சிறிது பா... மேலும் பார்க்க

மாதப்பூா் முத்துக்குமாரசாமி மலைக் கோயிலில் 11-இல் தைப்பூசத் தேரோட்டம்!

மாதப்பூா் முத்துக்குமாரசாமி மலைக் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறுகிறது. பல்லடம் அருகே மாதப்பூரில் பிரசித்தி பெற்ற முத்துக்குமாரசாமி மலைக் கோயில் உள்ளது. இந்தக் கோயில் த... மேலும் பார்க்க