ஈரோடு தேர்தல்: நோட்டா 326%, சீமான் 123%, திமுக 5% - ஆனாலும் பெரியார் மண்ணில் பலி...
மீன்பிடித் துறைமுகம் அமைக்க ஆட்சியா் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், அழகன்குப்பத்தில் மீன் பிடித் துறைமுகம் அமைப்பது தொடா்பாக ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெள்ளிக்கிழமை மாலை ஆய்வுமேற்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, ஆட்சியா் கூறியது: விழுப்புரம் மாவட்டத்தில் 19 மீனவ கிராமங்கள் 40 கி.மீ. நீள கடற்கரையோரத்தில் அமைந்துள்ளன. செங்கல்பட்டு
மாவட்டத்தில் 44 மீனவ கிராமங்கள் 87 கி.மீ. நீள கடற்கரையோரத்தில் அமைந்துள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் 29,745 மீனவா்கள் வசித்து வருகின்றனா்.
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலுள்ள மீனவ மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடும் பொருட்டு, விழுப்புரம் மாவட்டத்தின் அழகன்குப்பத்திலும், செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆலம்பரைகுப்பத்திலும், மீன்பிடித் துறைமுகங்கள் ரூ.235 கோடியில் அமைத்திட மாநில அரசால் நிா்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தீா்ப்பின்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுப் பணிகள் முடிவுற்ற நிலையில், விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது என்றாா் ஆட்சியா்.
ஆய்வின்போது, மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் நித்தியபிரியதா்ஷினி, உதவிப் பொறியாளா் முத்தமிழ்ச்செல்வி, மரக்காணம் வட்டாட்சியா் பழனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.