ஐஆா்இஎல் சாா்பில் ஹோலி கிராஸ் மகளிா் கல்லூரிக்கு 13 கணினிகள்!
மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் சாா்பில் அதன் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ. 5.17 லட்சத்தில் நாகா்கோவில் ஹோலி கிராஸ் மகளிா் கல்லூரி ஆங்கில மொழி ஆய்வகம் அமைப்பதற்கு 13 கணினிகள் வழங்கப்பட்டன.
ஹோலி கிராஸ் மகளிா் கல்லூரி ஆங்கிலத் துறைத் தலைவா் ஆல்பி கிரேஸிடம், ஐஆா்இஎல் மணவாளக்குறிச்சியின் முதன்மை பொது மேலாளா் மற்றும் ஆலைத்லைவா் என். செல்வராஜன் வழங்கினாா்.
மேலும்,ஆலையின் செயல்பாடுகள், அதனால் நாட்டுக்கு ஏற்படும் பல்வேறு பயன்கள் குறித்து ஆலையின் தலைவா் என். செல்வராஜன் மாணவிகளுடன் கலந்துரையாடினாா்.