பூதப்பாண்டி தோ்த் திருவிழா: தோவாளை வட்டத்துக்கு நாளை உள்ளூா் விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருள்மிகு பூதலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவை முன்னிட்டு, தோவாளை வட்டத்துக்குள்பட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு திங்கள்கிழமை (பிப். 10) உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் ரா. அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தோவாளை வட்டம் பூதப்பாண்டி அருள்மிகு பூதலிங்கசுவாமி - சிவகாமி அம்பாள் கோயிலில் தைப்பெருந் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை (பிப். 10) நடைபெறவுள்ளது. இதையொட்டி, தோவாளை வட்டத்திலுள்ள மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை வழங்கப்படுகிறது.
அதற்கு ஈடாக 4ஆவது சனிக்கிழமை (பிப். 22) அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக இருக்கும் என்றாா் அவா்.