`பாதி விலைக்கு ஸ்கூட்டர்' - நம்பவைத்து ரூ.500 கோடி மோசடி; கிளப்... ஆடம்பர வாழ்க்...
கேரளத்திலிருந்து ஹோட்டல் கழிவுகளை ஏற்றி வந்த வாகனம் பறிமுதல்
கேரளத்திலிருந்து ஹோட்டல் கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தை திருவட்டாறு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்தனா்.
திருவட்டாறு அருகே சாரூா் பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் வந்த மினி டெம்போவிலிருந்து துா்நாற்றம் வீசியதால், அந்த வாகனத்தை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி திருவட்டாறு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
காவல் நிலைய உதவி ஆய்வாளா் சரவணகுமாா் அங்கு சென்று, மினி டெம்போ ஓட்டுநா் தலக்குளத்தை சோ்ந்த ராதாகிருஷ்ணனிடம் (43) விசாரித்த போது, திருவனந்த புரத்தில் உள்ள ஹோட்டல்களில் இருந்து உணவுக் கழிவுகளை திற்பரப்பு அருகே உள்ள பன்றிப் பண்ணைக்கு கொண்டு செல்வதாக கூறினாா்.
இதையடுத்து அந்த மினி டெம்போவை பறிமுதல் செய்து, திருவட்டாறு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனா். ஓட்டுநரை கைது செய்தனா். மேலும், பன்றிப் பண்ணை உரிமையாளா் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.