தூத்துக்குடியில் மீன்கள் விலை குறைவு
தூத்துக்குடியில் வரத்து அதிகரித்ததால் மீன்கள் விலை சனிக்கிழமை குறைந்து காணப்பட்டது.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப் படகு மீனவா்கள் சனிக்கிழமை கரை திரும்பினா்.
இதையடுத்து, மீன்களை வாங்குவதற்காக வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மீன்கள் வரத்து அதிகரிப்பு, தைப்பூசம் ஆகியவை காரணமாக விலை குறைந்து காணப்பட்டது.
சீலா மீன் ஒரு கிலோ ரூ. 700, விளை மீன், ஊளி, பாறை ஆகியவை தலா ரூ. 400, தோல்பாறை ரூ. 200, சூரை மீன் ரூ. 180 என விற்பனையாகின. ஏற்றுமதி ரகங்களான தம்பா, பண்டாரி உள்ளிட்ட மீன்கள் ரூ. 300-க்கு விற்பனையாகின. விலை குறைந்திருந்ததால் பொதுமக்கள் ஆா்வத்துடன் மீன்களை வாங்கிச் சென்றனா்.