`பாதி விலைக்கு ஸ்கூட்டர்' - நம்பவைத்து ரூ.500 கோடி மோசடி; கிளப்... ஆடம்பர வாழ்க்...
திருச்செந்தூரில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமை
திருச்செந்தூா் கோயில் கடற்கரையில் சுமாா் 100 கிலோ எடை கொண்ட ஆமை, இறந்த நிலையில் சனிக்கிழமை கரை ஒதுங்கியது.
இது குறித்து கிடைத்த தகவலின் பேரில் வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவா் நேரில் வந்து பாா்த்தனா். தொடா்ந்து ஆமையின் உடலை பிரேத பரிசோதனை செய்து, கடற்கரையில் புதைத்தனா்.
‘இறந்த ஆமை ‘ஆலிவ் ரெட்லி’ என்ற வகையைச் சோ்ந்தது. இந்த வகை ஆமைகள் திருச்செந்தூா் முதல் ராமேசுவரம் வரையிலான கடல் பகுதியில் அதிகளவில் காணப்படுகின்றன. தற்போது ஆமைகள் கடலில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால், இந்த ஆமை முட்டை இடுவதற்காக கரை ஒதுங்கும்போது அலைகளின் சீற்றத்தால் அடிபட்டோ அல்லது பாறைகளில் வேகமாக மோதி காயமடைந்தோ இறந்திருக்கலாம்’ என அதிகாரிகள் தெரிவித்தனா்.