`பாதி விலைக்கு ஸ்கூட்டர்' - நம்பவைத்து ரூ.500 கோடி மோசடி; கிளப்... ஆடம்பர வாழ்க்...
மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போக்ஸோ சட்டத்தில் இளைஞா் மீது வழக்கு
தூத்துக்குடியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, இளைஞா் மீது தூத்துக்குடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ்(25). இவா், தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொந்ததரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோா், தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து மோகன்ராஜை தேடி வருகின்றனா்.