கரீபியன் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!
மெக்சிகோ: கரீபியன் கடற்பகுதியில் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஹோண்டுராஸுக்கு வடக்கே கேமன் தீவுகளுக்கு தென்மேற்கே கரீபியன் கடலில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொலம்பியா, கேமன் தீவுகள், கோஸ்டாரிகா, ஜமைக்கா, நிகரகுவா தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 0.3 மீ முதல் 1 மீட்டர் வரை அலையின் தாக்கம் இருக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கா தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது.