இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா!
மண்ணச்சநல்லூர்: இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலின் உப கோயில் இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் திருக்கோயில். பிரசித்தி பெற்ற இத்திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
![](https://media.assettype.com/dinamani/2025-02-09/xxlceoaz/5076304b-d91d-4018-8494-08ba7df85bf7.jpg)
ஆதி மாரியம்மன் கோயில் வளாகத்திலிருந்து பக்தர்கள் பூத்தட்டுகளுடன் தேரோடும் வீதிகளில் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பூக்களைச் சாற்றினர்
தொடர்ந்து, சிறப்புப் பூஜைகளுக்கு பின்னர் மஹா தீபாரதனை நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கொண்டு வந்த பூக்கள் அம்மனுக்குச் சாற்றப்பட்டது.
இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.