செய்திகள் :

தில்லியை பாதுகாப்பானதாகவும், தூய்மையானதாகவும் மாற்றுவோம்: கிரண் பேடி

post image

புது தில்லி: "தில்லியை ஆரோக்கியமானதாகவும், பாதுகாப்பானதாகவும், தூய்மையானதாகவும் மாற்றுவோம்" என்று புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றி குறித்து 2015 ஆம் ஆண்டு பாஜக தில்லி முதல்வர் வேட்பாளராக இருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநருமான கிரண் பேடி ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது பேசியதாவது:

இது மாற்றத்திற்கான, மறுசீரமைப்புக்கான மக்கள் தீர்ப்பு. தில்லி சீரழிந்து, வீழ்ச்சியடைந்த நிலையில் தில்லி முழுவதும் மறுசீரமைப்பை நோக்கி காத்திருந்த மக்கள், இப்படியொரு வரலாற்று தீர்ப்பை வழங்கியுள்ளனர். தூய்மை அபியான் மற்றும் பிற மத்திய அரசின் திட்டங்கள் பிற மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டன, ஆனால் அவை தில்லியில் மட்டும் நிறுத்தப்பட்டது ஏன்? தில்லி மக்களின் இந்த தீர்ப்பு ஒரு மறுசீரமைப்புக்கானது என்று நான் நம்புகிறேன், மேலும் இது அமையவிருக்கும் அரசாங்கத்துக்கான ஒரு பெரிய பொறுப்பு," என்று அவர் கூறினார்.

இதையும் படிக்க | ஆக்கபூா்வமான எதிா்க்கட்சியாக செயல்படுவோம்: பிரியங்கா கக்கா்

மேலும் குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர் குற்றச்சாட்டுகளுக்கான நேரம் முடிந்துவிட்டது என்றும், இப்போது நமது கவனம் எல்லாம் நிர்வாகம் மற்றும் தலைநகர் வளர்ச்சியில் இருக்க வேண்டும். மக்கள் முன்னேற்றம், தூய்மை, குடியிருப்பு வசதிகள் மற்றும் நம்பிக்கையான அரசாங்கத்தை விரும்புகிறார்கள். இதனால் தில்லி இனி உலகிற்கு ஒரு முன்மாதிரியாக மாறும் என்றும் கூறினார்.

பொது சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் தூய்மை போன்ற முக்கிய பிரச்னைகளை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரை பேடி, "நான் பழைய தில்லியில் வசிக்கிறேன். தில்லியை விட்டு வெளியேறிவிடலாம் என்றெல்லாம் உணர்ந்தேன்." ஆனால் மக்கள் அளித்த தீர்ப்பை அடுத்து "இப்போது நாங்கள் தில்லியை ஆரோக்கியமானதாகவும், பாதுகாப்பானதாகவும், தூய்மையானதாகவும் மாற்றுவோம், அமைய இருக்கும் இரட்டை எஞ்சின் அரசாங்கத்தால் அது நடக்கும்." என்று அவர் மேலும் கூறினார்.

விமானப் படையின் மகா கும்பமேளா இது: விமான கண்காட்சியை துவக்கி வைத்த ராஜ்நாத்!

பெங்களூருவில் ஏரோ இந்தியா - 2025 விமான சாகச நிகழ்ச்சி மற்றும் கண்காட்சியை இன்று (பிப்.10) மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தார்.ஏரோ இந்தியா கண்காட்சியில் வெளிநாடுகளைச் சோ்ந... மேலும் பார்க்க

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டார். மேலும் பார்க்க

தனம் தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

நடிகை சத்யா மற்றும் ஸ்ரீகுமார் பிரதான பாத்திரங்களில் நடிக்கும் ‘தனம்’ தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சத்யா. தற்போது சன் ... மேலும் பார்க்க

அதிமுக பலவீனம் அடையக் கூடாது: திருமாவளவன்

அதிமுகவை பாஜக விழுங்கப் பார்க்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.அத்திக்கடவு-அவிநாசி திட்டக் குழு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்திய பா... மேலும் பார்க்க

தில்லி தோ்தல் முடிவுகள் பிகார் தேர்தலில் எதிரொலிக்காது: தேஜஸ்வி யாதவ்

பாட்னா: தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக பெற்றிருக்கும் வெற்றி, இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் பிகார் பேரவைத் தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று ராஷ்ட்ரீய ஜ... மேலும் பார்க்க

"பிஜாப்பூரில் மிகப்பெரிய வெற்றி": பாதுகாப்புப் படையினருக்கு அமித் ஷா பாராட்டு

புதுதில்லி: சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் 31 நக்சலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதற்காக பாதுகாப்புப் படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவித்துள்... மேலும் பார்க்க