பழனி தைப்பூசம்: சிறப்பு ரயில் இயக்கம்
பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவையொட்டி நாளை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
அதன்படி மதுரை-பழனி இடையே பிப்.11, 12 ஆகிய நாள்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து காலை 8.45 மணிக்கு புறப்படும் ரயில் காலை 11.30 மணிக்கு பழனி சென்றடையும். மறுமார்க்கமாக பழனியில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு 5.45 மணிக்கு ரயில் மதுரை வந்தடையும்.
பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் கடந்த 5-ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் திங்கள்கிழமை (பிப்.10) திருக்கல்யாணமும், வெள்ளித் தேரோட்டமும், செவ்வாய்க்கிழமை தைப்பூசத் திருத் தேரோட்டமும் நடைபெறவுள்ளது.
மாணவர்கள் ஒன்றும் ரோபோக்கள் அல்ல.. பிரதமர் மோடி
இதனிடையே பக்தா்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முதல் முறையாக திங்கள்கிழமை முதல் 3 நாள்களுக்குச் சிறப்புத் தரிசனக் கட்டண முறையை இந்து சமய அறநிலையத் துறை ரத்து செய்துள்ளது. இதனால், மலையேறும் பக்தா்கள் அனைவரும் பொது தரிசனத்தையே பின்பற்ற கோயில் நிா்வாகம் அறிவுறுத்தியது.
மேலும் திருச்சி, மதுரை, கோவை ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது சிறப்பு ரயிலும் இயக்கப்பட உள்ளது.