குடிமைப் பணி தோ்வு ஆா்வலா்கள் உயிரிழந்த விவகாரம்: பயிற்சி மையத்தின் சிஇஓ, ஒருங...
Career: தமிழ் எழுத, படிக்கத் தெரியுமா? - திருவண்ணாமலை கோவிலில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள்
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
வெளித்துறையில் டைப்பிஸ்ட், காவலர், கூர்க்கா, உபகோயில் சுத்தம் செய்பவர், கால்நடை பராமரிப்பாளர், உபகோயில் காவலர் உள்ளிட்ட வேலைகள்.
உள்துறையில் திருமஞ்சனம், முறை ஸ்தானீகம், ஒடல், தாளம்.
தொழில்நுட்பப் பிரிவில் மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப உதவியாளர், பிளம்பர், உதவி மின்பணியாளர்.
அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் சில காலிப்பணியிடங்கள்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 109.
வயது வரம்பு: 18 - 45.
சம்பளம்: ரூ.15,900 - 1,16,200.
கல்வித் தகுதி: ஒவ்வொரு பணிகளுக்கு ஏற்ப கல்வித் தகுதி, அனுபவத் தேவை மாறுபடுகிறது. பெரும்பாலான பணிகளுக்குத் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/f2p57dl3/Screenshot-2025-02-10-111045.png)
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/uigr6c9m/Screenshot-2025-02-10-111112.png)
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/w8h1gcoi/Screenshot-2025-02-10-111138.png)
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/dg8cjhlx/Screenshot-2025-02-10-111158.png)
குறிப்பு: இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: பிப்ரவரி 28, 2025.
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த லிங்கில் உள்ள 7, 8 பக்கங்களில் உள்ள விண்ணப்பத்தை நிரப்பி "இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவில், திருவண்ணாமலை - 606601" என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும்.
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.