Career: 10 ஆம் வகுப்பு படித்திருக்கிறீர்களா... தெற்கு ரயில்வேயில் பணி; எப்படி விண்ணப்பிக்கலாம்?
ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
ரயில்வேயில் உள்ள எஸ் அண்ட் டி, மெக்கானிக்கல், இன்ஜினியரிங், டிராபிக் துறைகளில் அசிஸ்டென்ட், பாயிண்ட்ஸ் மேன், டிராக் மெயின்டைனர் உள்ளிட்ட பணிகள்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 32,438; தெற்கு ரயில்வேயில் (சென்னை) 2,694.
சம்பளம்: ஆரம்பத்தில் ரூ.18,000
வயது வரம்பு: 18 - 33 (சில பிரிவினருக்கு வயது தளர்வுகள் உண்டு)
கல்வித் தகுதி:
பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ, தேசிய அப்ரண்டிஸ்ஷிப் - இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/3m7a1ed0/Screenshot-2025-02-07-134754.png)
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/zqr185u0/Screenshot-2025-02-07-134820.png)
குறிப்பு: டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
கணினி அடிப்படையிலான தேர்வு, உடற்தகுதித் தேர்வு, ஆவணங்கள் சரிபார்ப்பு, மருத்துவ ஆய்வு.
விண்ணப்பிக்கும் இணையதளம்:www.rrbapply.gov.in
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: பிப்ரவரி 22, 2025.
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs