பெற்றோர் உடலுறவு குறித்து அவதூறு: யூடியூபர்கள் மீது வழக்கு!
பெற்றோர் உடலுறவு கொள்வது குறித்து பொதுவெளியில் அவதூறாகப் பேசிய யூடியூபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னாவின் இந்தியாஸ் காட் லேடன்ட் என்ர நிகழ்ச்சியில் ரன்வீர் அல்லாபாடியா, அபூர்வா மகிஜா உள்ளிட்டோர் நடுவராகப் பங்கேற்றனர்.
இதில், பார்வையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ரன்வீர் அல்லாபாடியா, உங்கள் வாழ்நாள் முழுவதும் பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்க்க விரும்புவீர்களா... அல்லது அதை நிரந்தரமாக நிறுத்துவீர்களா? எனக் கேட்டார்.
அவரின் இந்தப் பேச்சுக்கு அங்கிருந்தவர்கள் கைதட்டி சிரித்தனர். இந்த விடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டது. கேலி என நினைத்து இந்திய கலாசாரத்தை அவமதிக்கும் வகையிலும் மற்றவர்களை புண்படுத்தும் வகையிலும் பேசியுள்ளதாக பலர் கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர்.
இதற்கு சமூக வலைதள பிரபலமான அபூர்வா மகிஜாவும் பதில் அளித்து அதனை ஊக்குவிக்கும் வகையில் பேசினார். அவருக்கும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.