செய்திகள் :

விலைவாசி உயர்வு, மணிப்பூர் நிலவரம்: மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நோட்டீஸ்!

post image

விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்தக் கோரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் இன்று(செவ்வாய்க்கிழமை) மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜன. 31 ஆம் தேதி குடியரசுத்தலைவர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாட்டில் அத்தியாவசியப் பொருள்கள் குறிப்பாக பால், காய்கறிகள், சமையல் எண்ணெய்கள் மற்றும் அன்றாடம் பயன்படுத்தும் பிற பொருள்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவது இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களைப் பாதித்து வருவதாகக் கூறி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் மக்களவையில் விஜய் வசந்த் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

2025 பட்ஜெட்டில் கொள்கை விவாதங்கள் இருந்தபோதிலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவோ நடுத்தர வர்க்கம் மற்றும் தொழிலாள வர்க்கக் குடும்பங்களை ஆதரிக்கவோ அரசாங்கம் எந்த உறுதியான நடவடிக்கைகளையும் செயல்படுத்தவில்லை என்றும் அவர் தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல மணிப்பூர் கலவரம் மற்றும் அந்த மாநிலத்தில் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சௌத்ரி, மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரேன் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக வன்முறை நீடிக்கும் மாநிலத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்று அவர் தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

கட்சிவிட்டுக் கட்சி தாவுவது காங்கிரஸ் கலாசாரம்! -ஆம் அத்மி

புது தில்லி : ஆம் ஆத்மி கட்சிக்குள் எந்தவொரு சலசலப்பும் இல்லை என்று பஞ்சாப் மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற... மேலும் பார்க்க

விருந்து விஷமானது: உ.பி.யில் 40 பேர் உடல்நல பாதிப்பு!

உத்தரப் பிரதேசத்தின் ஃபரித்பூர் கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்ட சுமார் 40 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றுள்ள... மேலும் பார்க்க

போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஷைன் டாம் சாக்கோ விடுதலை

கொச்சி : மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கிலிருந்து விடுவித்து கொச்சி கூடுதல் அமர்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை(பிப். 11) தீர்ப்பளித்துள்ளது. அவருடன் சேர்த்து இந்த வழக்க... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 5 பயங்கரவதிகள் சுட்டுக் கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தடைசெய்யப்பட்ட தலிபான் அமைப்பைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். கரக் மாவட்டத்தில் உள்ள மிர் க... மேலும் பார்க்க

ராகுல் மீதான அவதூறு வழக்கு பிப்.24-க்கு ஒத்திவைப்பு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு பிப்ரவரி 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத் தேர்தலின்போது அமித் ஷா குறித்து சர்ச்சைக்க... மேலும் பார்க்க

ஷ்ரத்தா வாக்கரின் தந்தை மரணம்! நீதி கேட்டு போராடியவர்

தில்லியில், திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த காதலனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா வாக்கரின் தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.கடந்த 2022ஆம் ஆண்டு காதலனால் படுகொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா... மேலும் பார்க்க