செய்திகள் :

``ஊழல் லிஸ்ட்டில் சிறை செல்லும் முதல் நபர் கமிஷன் காந்தி தான்" - அண்ணாமலை

post image
‘ஊழல் அமைச்சர் காந்தி உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது திமுக ஊழல் அமைச்சர்களில் காந்தியே முதல் நபராக சிறை செல்வார் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் இலவச காட்டன் வேட்டி சேலை திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஊழல் செய்து கொண்டிருக்கிறார் அமைச்சர் கமிஷன் காந்தி கடந்த ஆண்டு வேட்டி நெசவு செய்யப் பயன்படுத்தப்படும் கிலோ ரூ.320 வரை விற்கப்படும் பருத்தி நூலைக் குறைவாகவும், அதில் பாதி விலையான ரூ160-க்கே கிடைக்கும் பாலியஸ்டர் நூலை அதிகமாகவும் வாங்கி வேட்டி தயாரித்து மக்களை ஏமாற்றியதை, தமிழக பாஜக சார்பாக, கோவையில் உள்ள ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு செய்து, மக்களுக்கு கொடுத்த வேட்டியில் 78 சதவீதம் பாலியஸ்டர், வெறும் 22 சதவீதம் மட்டுமே காட்டன் என்பதைக் கண்டறிந்து, உற்பத்திச் செலவில் மிகப்பெரிய அளவில் ஊழல் செய்திருப்பதை வெளிப்படுத்தினோம்.

minister gandhi

2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11-ஆம் தேதி, தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் என்னை சந்தித்து இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விளக்கங்களை கேட்டறிந்தனர். மேலும், அதிகாரிகள் கேட்டதற்கிணங்க, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட வேட்டி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகத்தில் ஜூலை 13ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது. தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், இந்த ஊழல் புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

இந்த ஆண்டும், பொங்கல் தொகுப்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வேட்டியில் வழக்கமாகப் பயன்படுத்தி வந்த பருத்தி நூலின் அளவைக் குறைத்து விட்டு, விலை குறைவான பாலியஸ்டர் நூலைப் பயன்படுத்தி ஊழல் செய்திருக்கிறார்கள். இதனை அடுத்து, தமிழக அரசு கைத்தறித் துறையின் இயக்குனரான, ஐஏஎஸ் அதிகாரி சண்முகசுந்தரம், தரப் பரிசோதனையில் தெரிவு செய்யப்படாத சுமார் 20 லட்சம் வேட்டிகளை, அந்தந்த கூட்டுறவு சங்கங்களுக்கே திருப்பி அனுப்பி, அதே எண்ணிக்கையில், நிர்ணயிக்கப்பட்ட தரத்திலான வேட்டிகளை, அரசு கொள்முதல் கிடங்குக்கு அனுப்பி வைக்கக் கூறி, கடந்த டிசம்பர் 3, 2024 அன்று குறிப்பாணை அனுப்பியிருக்கிறார்.

Annamalai

கூட்டுறவு சங்கங்கள் தரமான வேட்டிகளை அனுப்ப எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மீண்டும், கடந்த 06.02.2025 அன்று, நிர்ணயிக்கப்பட்ட தரத்திலான வேட்டிகளை அரசு கொள்முதல் கிடங்குக்கு அனுப்பவில்லை என்றால், இழப்பீடு நடவடிக்கை எடுப்பதோடு. எதிர்காலத்தில் இந்த சங்கங்களுக்கு உற்பத்தி திட்டம் வழங்கப்பட மாட்டாது என்பதையும் விரைவுக் குறிப்பாணை தெரிவித்திருக்கிறார். ஆனால், கூட்டுறவு சங்கங்கள் என்ற பெயரில், தனது பினாமி நிறுவனங்கள் மூலம் மக்கள் பணத்தை நூதனமாகக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அமைச்சர் காந்தி, தான் செய்யும் ஊழலுக்கு, ஐஏஎஸ் அதிகாரி சண்முகசுந்தரம் தடையாக இருக்கிறார் என்பது தெரிந்ததும், அடுத்த இரண்டு நாட்களில், அவரை கைத்தறித் துறையில் இருந்து பணிமாற்றம் செய்திருக்கிறார்கள்.

கைத்தறித் துறையில் நடக்கும் மெகா ஊழலை கடந்த ஆண்டே கண்டுபிடித்துக் கூறியும், முதல்வர் ஸ்டாலின், அவரைத் தொடர்ந்து அதே துறையில் அமைச்சராக நீடிக்கச் செய்கிறார் என்றால், அமைச்சர் செய்யும் ஊழலின் பங்கு முதல்வருக்கும் செல்கிறது என்பதுதானே பொருள்? தனது பணியை சரியாகச் செய்து, ஊழல் நடப்பதை வெளிக்கொண்டு வந்த அரசு அதிகாரியை, இரண்டு நாட்களிலேயே பணிமாற்றம் செய்திருப்பது அதைத்தானே உறுதிப்படுத்துகிறது? இப்படி ஒரு ஆட்சி நடத்த அசிங்கமாக இல்லையா?

ஒவ்வொரு ஆண்டும், ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகளில் கொள்ளையடிக்கும் அமைச்சர் காந்தி, இனியும் கைத்தறித் துறை அமைச்சராக நீடிக்கக் கூடாது. உடனடியாக, அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். வரும் 2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது சிறைக்குச் செல்லவிருக்கும் திமுகவின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்திருக்கிறார்.

`அப்செட்’ செங்கோட்டையன் - 8 ஆண்டுகள் அமைதிக்குப்பின் எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி

மெளனத்தை கலைத்த செங்கோட்டையன்அ.தி.மு.க-வை வழிக்கு கொண்டுவர, பா.ஜ.க எத்தனையோ வழிமுறைகளை கையாண்டுக் கொண்டேதான் இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் இன்னமும் விடாமல் துரத்துகிறது. தொடர்ச்சியான ரெய்டு அஸ்திரங... மேலும் பார்க்க

"பற்றாக்குறையை சமாளிக்க யூனிட் ரூ.20க்கு தனியாரிடம் மின்சாரம் வாங்குவதா?" - திமுகவை சாடும் அன்புமணி

பா.ம.க தலைவர் அன்புமணி, ``பற்றாக்குறையை சமாளிக்க யூனிட் ரூ.20க்கு தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதா?" என்று ஆளும் திமுக அரசை விமர்சித்து, ``மின் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும்." என்று வலியுறுத்தி... மேலும் பார்க்க

`2026 தேர்தல்; அம்மாவின் கட்சிக்கு மூடு விழா நடத்த வேலைகள் நடக்கின்றன!' - டி.டி.வி.தினகரன் தாக்கு

புதுக்கோட்டை மாவட்டம், பரவாக்கோட்டையில் மறைந்த அ.ம.மு.க அமைப்புச் செயலாளர் சிவசண்முகம் படத்திறப்பு விழாவிற்கு, டி.டி.வி.தினகரன் அவர் இல்லத்தில் நேரில் சென்று படத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு திறந்த... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: `இந்துத்துவா அரசியலுக்குப் பாதை அமைக்கிறதா திமுக?' - சீமான் காட்டம்!

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா - முருகன் கோயில் விவகாரம் அரசியலாக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் விவாதமானது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் ... மேலும் பார்க்க

`பெரியாரை ஏற்றுக்கொள்ளும் என் தம்பிகள், என்னை விட்டு விலகிச் செல்லலாம்' - சீமான் ஓப்பன் டாக்!

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,: “பிரபாகரன் உள்ளிட்ட உலகத்தில் யார் பெரியாரை ஏற்றுக் கொண்டாலும் நான் பெரியாரை ஏற்று... மேலும் பார்க்க

Vijay: `தைப்பூசத்துக்கு வாழ்த்து; திருப்பரங்குன்றம் பிரச்னையில் சைலன்ட்'- என்ன நினைக்கிறார் விஜய்?

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோருடன் பரபர மீட்டிங்கை நடத்தி முடித்திருக்கிறார் விஜய். பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா என விஜய் கட்சியின் முக்கியமான நிர்வாகி... மேலும் பார்க்க