சரியும் Stock Market-ல் முதலீடு செய்வது புத்திசாலித்தனமா? | IPS finance - 136 | ...
`2026 தேர்தல்; அம்மாவின் கட்சிக்கு மூடு விழா நடத்த வேலைகள் நடக்கின்றன!' - டி.டி.வி.தினகரன் தாக்கு
புதுக்கோட்டை மாவட்டம், பரவாக்கோட்டையில் மறைந்த அ.ம.மு.க அமைப்புச் செயலாளர் சிவசண்முகம் படத்திறப்பு விழாவிற்கு, டி.டி.வி.தினகரன் அவர் இல்லத்தில் நேரில் சென்று படத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன்,
“டெல்லியில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க-விற்கு கிடைத்த வெற்றி, பத்தாண்டுகளாக மோடியின் செயல்பாட்டால் டெல்லி மக்கள் கொடுத்துள்ள வெகுமதிப்பு தான் இந்த வெற்றி. தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இருப்பிடத்தை தருவோம் என கூறிய தி.மு.க, அதை நிறைவேற்றவில்லை.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/ahquehwb/ttv-dinakaran.jpg)
மாறாக, தற்பொழுது கூலிப்படைகள் தான் அதிக அளவு தமிழ்நாட்டில் குற்றங்களை செய்து வருகின்றன. ரூ. 5000-க்கும், ரூ. 10,000-க்கும் கூலிப்படைகள் இருக்கின்றன. இதனால்தான், இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என்று கூறி வருகிறோம். தி.மு.க-விற்கு மறைமுகமாக தேர்தலில் வேலை செய்வதற்காக எடப்பாடி பழனிசாமி கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். வரும் 2026 - ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அம்மாவின் கட்சியை மூடு விழா நடத்துவதற்காக எல்லா வேலையும் செய்து கொண்டிருக்கின்றார்கள்” என்று குற்றம்சாட்டினார்.