திருப்பத்தூர் ஏரியின் அவலநிலையை சுட்டிக்காட்டிய விகடன்; தூய்மைப்படுத்தி நடவடிக்க...
UK: `வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே வேலை..' நிறுவனங்கள் இப்படி முடிவு எடுக்க காரணம் என்ன?!
'வாரத்திற்கு 90 நாள்கள் வேலை செய்ய வேண்டும்' என்ற பேச்சு தற்போது இந்தியாவில் ஹாட் டாப்பிக் ஆக போய்கொண்டிருக்கும் இந்த வேளையில், இங்கிலாந்தில் உள்ள 200 நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கான வேலை நாள்களை ஐந்தில் இருந்து நான்கு நாள்களாக குறைத்துள்ளது.
இந்த முன்னெடுப்பு இங்கிலாந்திற்கு புதிதல்ல. ஏற்கெனவே, மார்க்கெட்டிங், விளம்பரம், மீடியா, தொண்டு நிறுவனங்கள் போன்றவை தங்களது பணியாளர்களுக்கு வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே வேலை நாள்கள் என்ற நடைமுறையை கொண்டுவந்துவிட்டன. இதில் தற்போது புதியதாக 200 நிறுவனங்கள் இணைந்துள்ளது.
'4 நாள் வேலை நாள்கள்' என்ற கொள்கையை தீவிரமாக பரப்புவோர் இதைப் பற்றி பேசும்போது, "9-5 அதாவது ஐந்து நாள் வேலை நாள்கள் என்ற நடைமுறை 100 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவந்த நடைமுறை ஆகும். இது இப்போதைய காலக்கட்டத்திற்கு சரி வராது. வாரத்தில் நான்கு நாள்கள் மட்டுமே வேலை நாள்கள் என்பது மக்களுக்கு இன்னமும் மகிழ்ச்சியான வாழ்க்கையையும், தங்களது ஆசைகளை நிறைவேற்றி கொள்ளும் வாய்ப்பையும் தரும்" என்று கூறுகிறார்கள்.
'நான்கு நாள்கள் வேலை நாள் எல்லாம் சரி; சம்பளம்...?' என்ற கேள்வி எழும். தற்போது இங்கிலாத்தில் கொண்டு வந்திருக்கும் நடைமுறையில், பணியாளர்களுக்கு எந்தவித சம்பளக் குறைப்பும் இல்லை. அதே சம்பளம் தான் தொடர உள்ளது.
தற்போது புதிதாக நான்கு நாள்கள் வேலை நாள்களை அறிமுகப்படுத்தி உள்ள 200 நிறுவனங்களின் ஒட்டு மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 5,000 ஆகும். இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் கிரியேட்டிவ், பொறியியல் மற்றும் தயாரிப்பு, ஹெச்.ஆர், பொழுதுபோக்கு, கணக்கியல், வங்கி மற்று நிதி, வணிகம் ஆகிய துறைகளை சேர்ந்தது ஆகும்.
ஆனால், நான்கு நாள்களில் வேலை நேரத்தின் அளவு குறித்து தெளிவான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இந்தியாவிற்கு 4 நாள்கள் வேலை நாள்கள் நடைமுறை கொண்டுவரலாமா...உங்கள் கருத்து என்ன மக்களே?!