செய்திகள் :

``லிவ்-இன் ரிலேஷன்ஷிப் பிரச்னைகளைத் தீர்க்க இதை உருவாக்குங்கள்" - ராஜஸ்தான் நீதிமன்றத்தின் உத்தரவு

post image
லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்களின் பாதுகாப்புக்குப் பொருத்தமான சட்டம் இயற்றப்படும் வரை, இந்த ரிலேஷன்ஷிப்பில் எழும் பிரச்னைகளைத் தீர்க்க வலைத்தளப் பக்கத்தை உருவாக்குமாறு மாநில அரசுக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

முன்னதாக, லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் பலர் பாதுகாப்பு கோரி தாக்கல் செய்த மனுக்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அன்னோப் குமார் தந்த் அடங்கிய ஒற்றை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

live-in relationship

அப்போது, லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பை நெறிமுறைப்படுத்தவேண்டிய அவசியத்தை வலியுறுத்திய நீதிமன்ற அமர்வு, ``பலர் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கின்றனர். ஆனால், இதைக் குடும்பமும் சமூகமும் ஏற்றுக்கொள்ளாததால் அவர்களிடமிருந்து இவர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர். அதனால், அரசியலமைப்பின் 226-வது பிரிவின் கீழ் ரிட் மனு தாக்கல் செய்து, பிரிவு 21-ன் கீழ் பாதுகாப்பு கோரி நீதிமன்றங்களை அணுகுகின்றனர். நீதிமன்றங்கள் இதுபோன்ற மனுக்களில் நிரம்பி வழிகின்றன.

லிவ்-இன் ரிலேஷன்ஷிப் ஐடியா தனித்துவமானதாகவும், கவர்ச்சிகரமானதாகவும் தோன்றலாம். ஆனால், உண்மையில் இதனால் வரும் பிரச்னைகள் சவாலானதாக இருக்கும். இத்தகைய உறவில் பெண்ணின் நிலை மனைவிக்காக நிலை அல்ல. சமூகத்திலும் அதற்கான அங்கீகாரமோ, புனிதத்தன்மையோ இல்லை. எனவே, அரசாங்கத்தால் பொருத்தமான சட்டம் இயற்றப்படும் வரை, ஒவ்வொரு மாவட்டத்திலும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பை பதிவு செய்வதைக் கண்காணிக்க தகுதி வாய்ந்த அதிகார அமைப்பு நிறுவப்பட வேண்டும். அந்த அமைப்பு, லிவ்-இன் ரிலேஷன்ஷிப் மற்றும் அவர்கள் மூலமாகப் பிறக்கும் குழந்தைகளின் குறைகளை நிவர்த்தி செய்யும்.

நீதிமன்றம் உத்தரவு

எனவே, லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வரும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக ஒரு போர்ட்டல் தொடங்கப்பட வேண்டும். மார்ச் 1 அல்லது அதற்குள் நடவடிக்கை எடுப்பதற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்." என்று உத்தரவிட்டது. அதோடு, இந்த உத்தரவின் நகலை தலைமைச் செயலாளர், சட்டம் மற்றும் நீதித்துறை முதன்மைச் செயலாளர், நீதி மற்றும் சமூக நலத்துறை செயலாளர் அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Relationship: மிடில் ஏஜ்ல தேனிலவு ஏன் கட்டாயம் போகணும்?

இரண்டாவது தேனிலவு... தேனிலவுக்கே போகாத தம்பதியர்தான் நம்மிடையே அதிகம் பேர். இருந்தாலும், இரண்டாவது தேனிலவு செல்வது ஏன் அவசியம்; திருமணமான எத்தனை வருடங்கள் கழித்து இரண்டாவது தேனிலவுக்குச் செல்லலாம்? இத... மேலும் பார்க்க

`தன்பாலின திருமணச் சட்டம்' தாய்லாந்தில் அமலுக்கு வந்தது; அதிகாரபூர்வ திருமணம் செய்த LGBTQ+ ஜோடிகள்!

தாய்லாந்து அரசு, தன்பாலின திருமணத்துக்கு கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கிய நிலையில், இன்று (ஜன.23) `தன்பாலின திருமணச் சட்டத்தை' அமலுக்கு கொண்டு வந்தது. இதனால், நூற்றுக்கணக்கான தன்பாலின ஈர்ப்பாளர்கள் தங்கள்... மேலும் பார்க்க

Relationship: உங்க கல்யாண வாழ்க்கை எந்த நிலைமையில் இருக்கு..? கண்டுபிடிக்கலாம் வாங்க!

ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதே உயிரினங்களின் இயற்கையான இயல்பு. அந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ விழைவது மனிதர்களின் இயல்பு. அதற்கு இந்த 5 ஸோன்களை தெரிந்துகொண்டால், மகிழ்ச்சி உங்களைவிட்டு விலகாமல் ப... மேலும் பார்க்க

Relationship: `லவ் பண்றப்போ தாய்ப்பூனை; அப்புறம் தாய்க்குரங்கு' - ஓர் இன்ட்ரஸ்ட்டிங் விளக்கம்

‘கல்யாணத்துக்கு முன்னாடி மொத ரிங் முடியறதுக்கு முன்னாடி போனை எடுத்தவர்/ன் கல்யாணத்துக்குப் பிறகு பத்து தடவை கால் பண்ணாலும் பிஸின்னு மெசேஜ் மட்டும் அனுப்புறார்/ன். அவரு/னுக்கு என் மேல லவ்வு குறைஞ்சுபோச... மேலும் பார்க்க

Eve Relationship: பிளே பாய்ஸ் உருவான கதையும் பெண்களின் எமோஷனல் திருப்தியும்..!

பிளே பாய்ஸ் ... ஆண்கள் பற்றி அடிக்கடி காதுல விழுற இந்த கேரக்டருக்கு என்ன அர்த்தம்..? இந்த கேரக்டர் கொண்ட ஆண்கள் பெண்கள் விஷயத்துல எப்படி நடந்துப்பாங்க..? இவங்க நல்லவங்களா, கெட்டவங்களா..? விளக்கமா சொல்... மேலும் பார்க்க

`மனைவி பர்தா அணியாதது ஒன்றும் கொடுமை அல்ல' - கணவர் விவாகரத்து கோரிய வழக்கில் அலகாபாத் நீதிமன்றம்

பொது இடங்களில் தனது மனைவி பர்தா அணிவதில்லை, பாரம்பர்ய பழக்கவழக்கங்களைச் சரியாக கடைப்பிடிப்பதில்லை என்று கணவர் விவாகரத்து கோரிய வழக்கில், கணவரின் கூற்றை மறுத்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய... மேலும் பார்க்க