`மாதம் 1500 ரூபாய்' -4000 பெண்களிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்கும் மகாராஷ்டிரா...
Relationship: உங்க கல்யாண வாழ்க்கை எந்த நிலைமையில் இருக்கு..? கண்டுபிடிக்கலாம் வாங்க!
ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதே உயிரினங்களின் இயற்கையான இயல்பு. அந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ விழைவது மனிதர்களின் இயல்பு. அதற்கு இந்த 5 ஸோன்களை தெரிந்துகொண்டால், மகிழ்ச்சி உங்களைவிட்டு விலகாமல் பார்த்துக்கொள்ளலாம் என்கிற மேரேஜ் கவுன்சிலர் சித்ரா அரவிந்த், அந்த 5 ஸோன்கள்பற்றி விளக்குகிறார்.
திருமண உறவில் 5 ஸோன்கள் இருக்கும். திருமணமான புதிதில் ஒருவரையொருவர் பாராட்டிக்கொண்டு காதலும் காமுமாக மகிழ்ச்சியாக இருப்பார்கள். இந்தக் காலக்கட்டத்தில் பெரும்பாலும் அவர்களுக்குள் பிரச்னை இருக்காது. அப்படியிருந்தாலும் அது அவர்களுக்கே தெரியாத அளவுக்கு வந்து போயிருக்கும். பல தம்பதியர் இந்த நேரத்தில் வருகிற பிரச்னைகளை கண்டுகொள்ள மாட்டார்கள். இதுதான் முதல் ஸோன்.
இரண்டாவது ஸோனில் சற்று த்ரில் குறைந்திருக்கும். பிரச்னை வந்தாலும், பெரியளவுக்கு சண்டைகள் வராது.
மூன்றாவது ஸோனில் துணையின் நெகட்டிவ் பக்கங்கள் தெரிய ஆரம்பிக்கும். பாராட்டுவது மறந்துபோய், துணையின் தவறுகளை கண்டுபிடிக்க ஆரம்பிப்பார்கள்
நான்காவது ஸோனில், 'அச்சச்சோ... தவறான நபரை தேர்ந்தெடுத்து விட்டோமோ' என்று யோசிக்க ஆரம்பிப்பார்கள்.
ஐந்தாவது ஸோனில், 'எனக்கு வாய்ச்சது தவறான ஆளுதான்' என்பதில் தெளிவாகி விடுவோம். இந்த எண்ணம் தொடர்ந்தால், பிரிந்து வாழ்வது, விவாகரத்து என ஒரு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும்.
பல தம்பதிகள் தாங்கள் எந்த ஸோனில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் வாழ்ந்துக் கொண்டிருப்பார்கள். மேலே சொன்ன பாயின்ட்ஸை வைத்து, எந்த ஸோனில் இருக்கிறீர்கள் என்பதை கவனித்து, முட்டல் மோதல்களை சரி செய்துகொண்டால், மகிழ்ச்சி உங்களைவிட்டு விலகாமல் பார்த்துக்கொள்ளலாம்.
Vikatan Play
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...