செய்திகள் :

15 அடி உயர டொனால்ட் டிரம்ப் வெண்கல சிலை... இத்தனை கோடி செலவா?

post image

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கவிருப்பதைத் தொடர்ந்து அவரின் 15 அடி உயர வெண்கல சிலையை ஓஹியோவைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் வடிவமைத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்தாண்டு நடைபெற்றது. இதில், ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸைத் தோற்கடித்து குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். டிரம்ப் பதவியேற்பு விழா (ஜன. 20) நாளை அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இந்தப் பதவியேற்பு விழாவுக்கு உலகம் முழுவதுமிருந்து பல பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ரூ. 1,731 கோடி செலவில் அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா!

இந்த நிலையில், ஓஹியோவைச் சேர்ந்த பிரபல சிற்பக் கலைஞர் ஆலர் காட்ரில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் 15 அடி உயர வெண்கல சிலையை வடிமமைத்துள்ளார். ‘டான் கொலாசஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சிலையை வடிவமைக்க 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 6.5 கோடி) செலவாகியுள்ளது.

கடந்தாண்டு ஜூலை 13 அன்று பேரணியில் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் போது அவரது காதுகளில் துப்பாக்கிக் குண்டு உரசிச் சென்றது. அப்போது தனது கைகளை உயர்த்தி அவர் முழக்கமிட்ட புகைப்படம் உலகம் முழுக்க வைரலானது. அதனை, நினைவுகூறும் விதமாக இந்தச் சிலையை வடிவமைத்துள்ளார் ஆலர் காட்ரில்.

6 டன் எடையுள்ள இந்தச் சிலையை டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அர்ப்பணிக்கும் நோக்கத்தில் உருவாக்கியதாக ஆலர் தெரிவித்தார். டிரம்ப்பின் இந்தச் சிலை விரைவில் நாடு முழுவதும் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு டிரம்ப்பின் அதிபர் நூலகத்தில் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சிலையை செய்வதற்கு கிர்ப்டோகரன்சி முதலீட்டாளர்கள் குழுவினர் நிதியுதவி அளித்துள்ளனர். கிரிப்டோகரன்சி குழுமத்திற்கு டிரம்ப்பின் ஆதரவு எப்போதும் இருப்பதாக நம்புகிறோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

’மேக் அமெரிக்க கிரேட் அகெய்ன்’ வெற்றிப் பேரணி இன்று நடைபெறும் நிலையில் ’டான் கொலாசஸ்’ சிலை வாஷிங்டனில் உள்ள கேப்பிடல் அரேனா ஒன் அரங்கில் நேற்று (ஜன. 18) திறக்கப்பட்டது.

ரூ. 1,731 கோடி செலவில் அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை பதவியேற்கவுள்ளார்.அமெரிக்காவின் 47-ஆவது அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பதவியேற்பு விழாவின் முதல் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சரவை வே... மேலும் பார்க்க

காஸா போர் நிறுத்தம் அமலானது!

ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போர் முடிவுக்கு வந்தது.காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்தாண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதன் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல... மேலும் பார்க்க

நாளை பதவியேற்கவுள்ள டிரம்ப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப், நாளை (ஜன. 20) பதவியேற்கவுள்ளார். இந்த நிலையி... மேலும் பார்க்க

லாரி வெடித்து விபத்து! தீயில் கருகி 60 பேர் பலி!

நைஜீரியாவில் பெட்ரோல் கொள்கலன் லாரி வெடித்து 60-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவையும் வடக்கு நகரமான கடுனா நகருடன் இணைக்கும் சந்திப்பில் 60,000 லிட்டர் பெட்ரோலுடன் சென்ற கொள்கல... மேலும் பார்க்க

அமெரிக்காவில் டிக் டாக் சேவை நிறுத்தம்!

அமெரிக்காவில் டிக் டாக் சேவையை பயன்படுத்தும் பயன்பாட்டாளர்களுக்கு சனிக்கிழமை (ஜன. 18) அந்நிறுவனம் அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில், டிக் டாக் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்... மேலும் பார்க்க

காஸா போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதில் சிக்கல்! ஹமாஸுக்கு இஸ்ரேல் நிபந்தனை

உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் ‘காஸா போர் நிறுத்த ஒப்பந்தம்’ இன்று (ஜன. 19) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ந... மேலும் பார்க்க