செய்திகள் :

Relationship: `லவ் பண்றப்போ தாய்ப்பூனை; அப்புறம் தாய்க்குரங்கு' - ஓர் இன்ட்ரஸ்ட்டிங் விளக்கம்

post image

‘கல்யாணத்துக்கு முன்னாடி மொத ரிங் முடியறதுக்கு முன்னாடி போனை எடுத்தவர்/ன் கல்யாணத்துக்குப் பிறகு பத்து தடவை கால் பண்ணாலும் பிஸின்னு மெசேஜ் மட்டும் அனுப்புறார்/ன். அவரு/னுக்கு என் மேல லவ்வு குறைஞ்சுபோச்சு’ என்று புலம்புகிற பெண்களைக் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் பார்க்கலாம். அந்தளவுக்கு, உருகி உருகிக் காதலித்தவன் திருமணத்துக்குப் பிறகு பாராமுகம் காட்டுவது வீட்டுக்கு வீடு இருக்கிற பிரச்னைதான்.

இந்த இயல்புபற்றி மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா பேசுகையில், ’’காதலிக்கிற ஆணின் மனதுக்குள் ‘இவள் நமக்குக் கிடைப்பாளா’ என்ற தவிப்பும், ’இவளை வேறு யாருக்காவது திருமணம் செய்து வைத்து விடுவார்களோ’ என்ற பயமும் இருக்கும். உண்மையாகக் காதல் வயப்பட்ட ஆணுடைய மனம் இப்படித்தான் யோசிக்கும். அதனால்தான், பெற்றோர்கள் பார்த்துச் செய்கிற திருமணங்களில்கூட, நிச்சயத்துக்குப் பிறகு மணிக்கணக்காகப் பேசுகிற ஆண்கள், திருமணத்துக்குப் பிறகு ஒன் வேர்ட் ஆன்ஸருக்கு மாறி விடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, கல்யாணமாகி விட்டது. இனி இவள் என்னுடன்தான் காலம் முழுக்க இருக்கப் போகிறாள், அவ்வளவுதான்.

காதல்

காதலிக்கும்போது ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் தன்னை நோக்கி ஈர்ப்பதற்காக நிறைய முயற்சிகள் செய்வார்கள். அழகுபடுத்திக் கொள்வது, இனிமையாகப் பேசுவது, நல்லவர்களாக காட்டிக் கொள்வது எல்லாமே இவன்/இவள் தன்னையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள்தாம். நோக்கம் நிறைவேறிய பிறகு, ஈர்ப்புக்கான முயற்சிக்கு இருவருமே முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார்கள்.

தினமும் சில மணி நேரம் சந்தித்துப் பேசிக்கொண்டபோது இருந்த காதல், என் குடும்பம், உன் குடும்பம், நம் குடும்பம், குழந்தைகள், பொருளாதாரச் சிக்கல்கள் என்று இத்தனைக்கும் நடுவில் குறைவது இயல்புதான். இவற்றையெல்லாம் தாண்டி, காதல் தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டுமென்றால், தம்பதியர்கள் தங்களுக்கான தனிமைத் தருணங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். காதலிக்கும்போது அல்லது திருமணமான புதிதில் சென்ற இடங்களுக்கு மறுபடியும் செல்வது, அப்போது நடந்துகொண்டதுபோல ரொமான்ஸுடன் இருப்பது என்று முயற்சி செய்தால், மனைவிகளின் இந்த மனக்குறை மாற வாய்ப்பிருக்கிறது.

Relationship

ஆணின் ஓர் இயல்பைப் பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். மனைவி வேலைக்குச் சென்று குடும்ப பாரத்தைப் பாதிக்குப் பாதி சுமந்தாலும், ஆணுடைய மனதில் ‘இது என் குடும்பம். இதற்கு நான்தான் தலைவன். இந்தக் குடும்பத்தை நான்தான் பராமரிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்துகொண்டே இருக்கும். இந்த அழுத்தம் காரணமாகவும் அவன் காதல் குறையலாம். இந்த வகை ஆண்கள், குடும்பப்பொறுப்புகள் குறைந்தபிறகு ‘மனைவியை இன்னும் கொஞ்சம் நேசித்திருக்கலாமோ’ என்று வருத்தப்படுவார்கள்.

நம் சமூகத்தில் திருமணமான ஆண், தன் மனைவியிடம் காதலாக நடந்துகொள்வதற்குத் தடையொன்று இருக்கிறது. மனைவி மீது வெளிப்படையாக காதலைக் காட்டுகிற கணவனை இந்தச் சமூகம் ‘பொண்டாட்டி தாசன்’ என்று கேலி செய்து ஆணின் ஈகோவை தூண்டி விட்டு விடுகிறது. ஒரு சில ஆண்கள் மட்டுமே ‘ஆமா.. நான் பொண்டாட்டி தாசன்தான்’ என்று இதை நையாண்டியாகக் கடக்கிறார்கள். வெளிநாடுகளைப் போல மனைவியைப் பொதுவெளியில் கொண்டாடுவதும் காதலிப்பதும் சகஜம்தான் என்ற நிலை வரவேண்டுமென்றால் இந்தச் சமூகமும் சற்று மாற வேண்டும்’’ என்றவர், கணவனின் பாராமுகத்துக்கான நெகட்டிவ் பக்கத்தையும் சொல்கிறார்.

பூர்ண சந்திரிகா

‘’திருமணம் மூலமாக விரும்பிய பெண்ணுடன் செக்ஸ் கிடைத்தவுடன், அவளிடம் பாராமுகம் காட்டுகிறான் என்றால் அவனுடைய காதல் மீதே சந்தேகம் கொள்ள வேண்டும். இந்த வகை ஆணுக்கு பெண்ணின் காதலைவிட உடலே பிரதானம். திருமணத்துக்குப் பிறகு மனைவியை அடிப்பது, குடித்துவிட்டு வந்து கொடுமைப்படுத்துவது, சிகரெட்டால் சுடுவது என்று சாடிஸ்ட்டாக நடந்துகொள்வது இந்த வகை ஆண்கள்தாம். சிலர் குடித்தால் மனைவியிடம் அன்பாக இருப்பார்கள். மற்ற நேரங்களில் கொடுமைப்படுத்துவார்கள். மேலே சொன்னவையெல்லாமே மனப்பிறழ்வு. இவர்களைத் திருமணத்துக்கு முன்பே தவிர்த்து விடுவது நல்லது. ஒருவேளை இவர்களுடன் திருமண பந்தத்தில் சிக்கிக்கொண்டீர்களென்றால், வாழ்க்கையே கடினமாகிவிடும். இந்த வகை ஆண்களை மைண்ட் டெவலப்மென்ட் கவுன்சலிங் கொடுத்துச் சரி செய்யலாம்'' என்கிறார்.

இயக்குநர் ஆர். கே. செல்வமணி இதனுடைய இன்னொரு பக்கத்தை நம்மிடம் விவரித்தார்.

‘’ஓர் ஆண், ஒரு பெண்ணைக் காதலிக்கும்போது காட்டுகிற அதே அன்பைத் திருமணத்துக்குப் பிறகும் காட்டுகிறானா என்றால், இல்லை என்பதுதான் நூறு சகிவிகித உண்மை. ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கும்போது, ஆணுக்கு அவளை எந்தளவுக்குக் காதலிக்கிறோம் என்பதை தெரியப்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயம். அதனால்தான் உருகி உருகிக் காதலிக்கிறான். இதுவே திருமணத்துக்குப் பிறகு அந்தப் பெண் அவனுக்கு நன்கு அறிமுகமானவளாகி விடுகிறாள். இந்த இடத்தில் தன்னுடைய காதலை வெளிப்படுத்துவதை ஆண் குறைத்துக்கொள்ள ஆரம்பிக்கிறான். ஓர் உதாரணத்துடன் சொல்ல வேண்டுமென்றால், காதலி 6 மணிக்குக் கடற்கரைக்கு வரச் சொன்னால், ஐந்தரைக்கெல்லாம் அட்டெண்டன்ஸ் போட்டு விடுவான். அதே பெண் மனைவியாகி, 6 மணிக்கு ஆஃபீஸ்க்கு வந்து என்னை பிக்கப் செய்துகொள்ளுங்கள் என்றால், ஆறே காலுக்குத்தான் போவான். தாமதமாகப் போனால் காதலி கோபித்துக்கொண்டு கிளம்பி விடுவாளோ என்ற பயம். காதலி மனைவியான பிறகு, நேரமானாலும் அவள் காத்திருப்பாள் என்ற நம்பிக்கை. ஆண், தான் நேசிக்கிற பெண்ணை எந்தக் காலத்திலும் அலட்சியப்படுத்த மாட்டான். தம்பதியரிடையே பரஸ்பரம் புரிந்துணர்வு வந்தபிறகு மனைவிக்கே இது புரிந்துவிடும்.

ரோஜா - செல்வமணி

ஓர் ஆண், காதலிக்கும்போது பூனைக்குட்டியைக் கவ்விக்கொண்டு அலைகிற தாய்ப்பூனையைப் போல இருப்பான். அதனால்தான் நேரங்காலம் பார்க்காமல் உருகுவான். திருமணத்துக்குப் பிறகு, குரங்குபோல மாறி விடுவான். அதாவது, குரங்குக்குட்டிதான் தன் தாயை இறுக்கிக்கொண்டிருக்கும். அதுபோல மனைவிதான் கணவனை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருப்பாள். அம்மா குரங்கைப் போல ஆண் ரிலாக்ஸாக மாறி விடுவான். ஆனால், தன் மனைவிக்கு வீட்டுக்குள்ளோ அல்லது பொதுவெளியிலோ ஒரு பிரச்னையென்றால் தாய்க்குரங்கைப்போல சட்டென்று தாங்கிப் பிடித்து விடுவான். இந்த அன்பை மனைவி மீது கணவன் கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும். மனைவியும், என் கணவர் என் மீது அன்பாகத்தான் இருப்பார் என்பதை நம்ப வேண்டும்’’ என்கிறார்.

VIKATAN PLAY - Parthiban Kanavu

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Eve Relationship: பிளே பாய்ஸ் உருவான கதையும் பெண்களின் எமோஷனல் திருப்தியும்..!

பிளே பாய்ஸ் ... ஆண்கள் பற்றி அடிக்கடி காதுல விழுற இந்த கேரக்டருக்கு என்ன அர்த்தம்..? இந்த கேரக்டர் கொண்ட ஆண்கள் பெண்கள் விஷயத்துல எப்படி நடந்துப்பாங்க..? இவங்க நல்லவங்களா, கெட்டவங்களா..? விளக்கமா சொல்... மேலும் பார்க்க

`மனைவி பர்தா அணியாதது ஒன்றும் கொடுமை அல்ல' - கணவர் விவாகரத்து கோரிய வழக்கில் அலகாபாத் நீதிமன்றம்

பொது இடங்களில் தனது மனைவி பர்தா அணிவதில்லை, பாரம்பர்ய பழக்கவழக்கங்களைச் சரியாக கடைப்பிடிப்பதில்லை என்று கணவர் விவாகரத்து கோரிய வழக்கில், கணவரின் கூற்றை மறுத்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய... மேலும் பார்க்க

சாப்பாடு வரத் தாமதமானதால் வேறு பெண்ணைத் திருமணம் செய்த மணமகன்; போலீஸிடம் சென்ற மணமகள் வீட்டார்!

உத்தரப்பிரதேசத்தில், சந்தௌலி மாவட்டத்தில் மணமகன் ஒருவர் சாப்பாடு வரத் தாமதமான காரணத்தினால் ஆத்திரத்தில் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து மணமகள் வீட்டாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார்.இந்தச் சம்பவத்... மேலும் பார்க்க

Relationship: ``நான் முக்கியமா, உங்க ஃபிரெண்ட்ஸ் முக்கியமா?'' - மனைவி சண்டை போட காரணம் என்ன?

‘நானா, அவனுங்களா... ரெண்டு பேருல உங்களுக்கு யாரு முக்கியம்னு இன்னிக்கு எனக்குத் தெரிஞ்சே ஆகணும்?’ - இந்தக்கால கணவன் - மனைவி பஞ்சாயத்தில் அடிக்கடி திட்டு வாங்குகிற அந்த ‘அவன்கள்’ கணவனின் நண்பர்கள்தாம் ... மேலும் பார்க்க

Relationship: திருமணத்துக்கு முந்தைய காதல்... எந்த வகை கணவர் சகஜமாக எடுத்துக் கொள்வார்?

ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ திருமணத்துக்கு முந்தைய காதல் என்பது வெகு சகஜமான விஷயம்தான். சிலருக்கு அது திருமணமாக தொடரும்; சிலருக்கு பிரேக் அப்பாக பிரிந்து விடுகிறது. நம் கலாசாரத்தில் மனைவியிடம், 'நம்ம கல... மேலும் பார்க்க

சாமானியர்கள் முதல் செலிப்ரிட்டீஸ் வரை... அதிகரிக்கும் விவாகரத்து - பாதிக்கப்படுவது பெண்களா, ஆண்களா?

திருமண வாழ்க்கையில், பிரபலங்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை விவாகரத்தை நாடுபவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. விவாகரத்தால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா, பெண்களா? சட்டம், சமூகம் என்ன ச... மேலும் பார்க்க