அம்பேத்கரின் படைப்புகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்...
Rana Daggubati: நடிகர் ராணா டகுபதி மீது எஃப்.ஐ.ஆர்! - ஹைதராபாத் காவல்துறை நடவடிக்கை!
பாகுபலி மூலம் உலகளவில் பிரபலமடைந்த நடிகர்களில் ராணா டகுபதியும் ஒருவர். தொடர்ந்து தெலுங்கு, தமிழ் எனப் பல்வேறு மொழிகளில் பிஸியாக இருக்கும் ராணா டகுபதி மீது ஹைதராபாத் நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. பிலிம் நகரில் இருக்கும் டெக்கான் கிச்சன் ஹோட்டல் நிலம் டகுபதி குடும்பத்தினருக்குச் சொந்தமானது என்றும், 2022-ம் ஆண்டு பாரத ராஷ்டிர சமிதி எம்.எல்.ஏ- நந்த குமார் என்ற நபருக்கு குத்தகைக்கு விட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், தங்கள் சொத்தை மீட்கவேண்டி, டகுபதி குடும்பத்தினர் சட்டவிரோதமாக அந்த ஹோட்டலை இடித்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இது தொடர்பாக நந்த குமார் நீதிமன்றத்தில், ``ஹோட்டலை இடித்ததால் ரூ.20 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது" என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ஏற்ற நீதிமன்றம் இந்த விவகாரத்தை விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், நடிகர் வெங்கடேஷ் டகுபதி, அவரது சகோதரரும் தயாரிப்பாளருமான சுரேஷ் டகுபதி, சுரேஷின் மகனும் நடிகருமான ராணா டகுபதி, ராணாவின் சகோதரரும் தயாரிப்பாளருமான அபிராம் டகுபதி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 448, 452, 458 மற்றும் 120B பிரிவுகளின் கீழ் - அத்துமீறல் மற்றும் குற்றவியல் சதி - குற்றம் ஆகியப் பிரிவுகளின் கீழ் ஹைதராபாத் காவல்துறை நேற்று கிரிமினல் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. தற்போதுவரை இந்த விவகாரம் தொடர்பாக டக்குபதி குடும்பத்தினர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.