ஆஸி. ஓபன்: இந்திய வம்சாவளி இளம் வீரருக்கு ஜோகோவிச் பாராட்டு!
சரியாக விளையாடாததால் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறவில்லை: வங்கதேச வீரர்
சரியாக விளையாடாததால் சாம்பியன்ஸ் டிராபிக்கான வங்கதேச அணியில் இடம்பெறவில்லை என அந்த அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான லிட்டன் தாஸ் தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபையில் அடுத்த மாதம் 19 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மற்ற அணிகளுக்கான ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில், இந்தியாவுக்கான ஆட்டங்கள் துபையில் நடத்தப்படுகின்றன.
இதையும் படிக்க: பஞ்சாப் கிங்ஸ் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தங்களது அணிகளை கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. இதுவரை நியூசிலாந்து, வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியங்கள் சாம்பியன்ஸ் டிராபிக்கான தங்களது அணிகளை அறிவித்துள்ளன.
சரியாக விளையாடவில்லை
சாம்பியன்ஸ் டிராபிக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சரியாக விளையாடாததால் சாம்பியன்ஸ் டிராபிக்கான வங்கதேச அணியில் இடம்பெறவில்லை என அந்த அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான லிட்டன் தாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: சாம்பியன் டிராபி தொடருக்கான அணித் தேர்வு எனது கட்டுப்பாட்டில் இல்லை. நான் அணியில் இடம்பெறாதது தேர்வுக்குழு உறுப்பினர்களின் முடிவு. அவர்கள்தான் யார் விளையாட வேண்டும் என்பதை முடிவு செய்யும் இடத்தில் இருக்கிறார்கள். அணிக்காக சிறப்பாக செயல்படுவதே எனது வேலை. அதனை சில காலமாக என்னால் செய்ய முடியவில்லை. அதை நினைத்து நான் வருத்தத்தில் இருப்பதாக நினைக்கிறேன்.
இதையும் படிக்க: இந்த முறை வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வேன்: நாதன் மெக்ஸ்வீனி
வங்கதேச அணிக்காக கடந்த காலங்களில் சிறப்பாக விளையாடியிருக்கிறேன். ஆனால், நான் மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்க வேண்டும். நான் தொடர்ந்து கடினமாக உழைப்பேன். அடுத்து என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம். நான் நன்றாக விளையாடி ரன்கள் குவிக்காததால் அணியில் இடம்பெறவில்லை. அதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றார்.