BB Tamil 8: நாளை வைக்கப்படுகிறதா 'பணப்பெட்டி'?! - எடுக்கப் போவது யார்?
விஜய் டிவியில் வரும் வாரத்துடன் நிறைவடைகிறது பிக்பாஸ் சீசன் 8. பதினெட்டு போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பிறகு வைல்டு கார்டு என்ட்ரி மூலம் ஆறு போட்டியாளர்கள் இணைந்தனர். அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் இதுவரை இருபது போட்டியாளர்கள் வெளியேறி விட்டனர்.
பணப்பெட்டி டாஸ்க்:
ஒரு சுவாரசியத்திற்காக எவிக்ட் ஆகிச் சென்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீடடுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஜாக்குலின், பவித்ரா, சௌந்தர்யா, விஷால், முத்துக்குமரன், ரயான் ஆகிய ஆறு பேர் தற்போது டைட்டிலுக்கான களத்தில் இருக்கும் சூழலில், பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கும் ஒரு விஷயம், பணப்பெட்டி டாஸ்க்.
ஒவ்வொரு சீசனிலுமே இந்த டாஸ்க்கிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். 'எப்போ அந்தப் பெட்டி வைக்கப்படும், அதில் எவ்வளவு பணம் சேரும்', 'எடுக்கப் போவது யார்?' என ஆர்வமுடன் கவனித்து வருவார்கள்.
இந்த சீசனில் பணப்பெட்டி இன்று வரை வைக்கப்படாத நிலையில், 'இந்த சீசனில் பணப்பெட்டி டாஸ்க் இருக்கா இல்லையா' என்கிற ஒரு கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே இது தொடர்பாக ஷோ தொடர்புடைய சில இடங்களில் விசாரித்தோம்.
''பணப்பெட்டி டாஸ்க் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கியமான ஒரு அங்கம். அதனால அதை மிஸ் பண்ண விரும்ப மாட்டாங்க. இந்த சீசன்ல நாளைக்கு அதாவத பொங்கல் பண்டிகை அன்னைக்கு பணப்பெட்டி வைக்கப்படலாம்னு தெரியுது.
அதுல இருந்து ஓரிரு நாள்ல இப்ப பிக்பாஸ் வீட்டுல இருக்கிற ஆறு பேர்ல ஒருத்தர் அதை எடுத்துட்டு அந்த வீட்டுல இருந்து வெளியேறலாம்னு சொல்லப்படுது'' என்றார்கள்.
ஆறு பேரில் ஒருவர் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறும்பட்சத்தில் மிச்சமிருக்கிற ஐந்து பேர் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு வந்து விடுகிறார்கள் என்பதால் மிட் வீக் எவிக்ஷன் என எதுவும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
பணப்பெட்டியை யார் எடுக்கப் போகிறார்கள் என்பது ஓரிரு தினங்களில் தெரிந்து விடும். யார் எடுப்பார்கள்... உங்கள் பதிலையும் கமென்ட் செய்யுங்கள்...