காதலிக்க நேரமில்லை விமர்சனம்: நித்யா மேனன், ரவி மோகன், ஏ.ஆர்.ரஹ்மான்; நம்மை இழுக...
BB Tamil 8: `எதுவுமே பண்ணாம இவ்வளவு தூரம் வந்துட்டிங்க' - சௌந்தர்யா- சுனிதா இடையே மோதல்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 99-வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.
கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் நிகழ்ச்சி முடிவடைய சில தினங்களே உள்ளன. இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து, தீபக் மற்றும் அருண் ஆகிய இருவர் வெளியேறியுள்ளனர். டாப் 5 போட்டியாளராக யார் யார் இருக்க போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் மக்களிடையே நிலவுகிறது.
இந்நிலையில் இன்று ( ஜனவரி 13) வெளியாகி இருக்கும் மூன்றாவது புரோமோவில் சுனிதாவிற்கும், சௌந்தர்யாவிற்கும் வாக்குவாதம் நடக்கிறது. 'இதெல்லாம் ஏன் கிட்ட வச்சுக்காதீங்க. நல்லா பண்றீங்க. எதுவுமே பண்ணாம இவ்வளவு தூரம் வந்துட்டிங்க' என்று சுனிதா சொல்ல சௌந்தர்யா, 'என்ன நல்லா பண்றாங்க. எதுவுமே பண்ணாம இங்க வந்து நாங்க உட்காரல' நான் மக்களை என்டர்டெயின்மென்ட் பண்ணிருக்கேன்.
அதுனாலதான் மக்கள் என்னைய இங்க உட்கார வச்சுருக்காங்க. என்று கோபப்படுகிறார். 'உங்கள பத்தி எல்லாம் தெரியும். உங்களுக்கு ஓட்டு போட உங்க சொந்தக்காரவுங்க இருப்பாங்க. எல்லாரும் இருப்பாங்க. ஆனா எனக்கு யார் இருப்பாங்க' என்று அழுகிறார் சுனிதா.