செய்திகள் :

90 Hours Job: `L&T நிறுவன தலைவர் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது'- L&T HR சோனிக்கா விளக்கம்

post image

சமீபத்தில் எல் அண்ட் டி (L&T) நிறுவனத் தலைவர் SN சுப்பிரமணியன், ‘வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்’ என்று கூறியது பெரும் பேசு பொருளாக மாறியது. இதற்கு முன்னர் கடந்த மாதம் இன்போசிஸ் (Infosys) தலைவர் நாராயணமூர்த்தி அவர்கள் ‘வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்’ என்று கூறினார். அதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் எல் அண்ட் டி நிறுவனத் தலைவர் SN சுப்பிரமணியன் கூறிய கருத்துகள் “தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டன” என எல் அண்ட் டி நிறுவன HR சோனிகா முரளீதரன் கூறியுள்ளார். 

இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள எல் அண்ட் டி நிறுவன HR சோனிகா முரளீதரன், “எங்கள் நிறுவன தலைவர் சுப்ரமணியனின் கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. அவர் ஒருபோதும் வாரத்திற்கு 90 மணி நேர வேலையை கட்டாயப்படுத்தவில்லை. அதை ஒருபோதும் பரிந்துரைக்கவும் இல்லை. அவருடைய கருத்துகள் இயல்பாகவே சாதாரணமான கருத்துகள் தான். இந்த கருத்துகள் அவருடைய உண்மையான எண்ணங்களை பிரதிபலிக்கவில்லை.

'90 மணிநேர வேலை' சர்ச்சை பேச்சு!
'90 மணிநேர வேலை' சர்ச்சை பேச்சு!

ஆனால் அது பல்வேறு விமர்சனங்களை தூண்டியது. நான் எல் அண்ட் டி நிறுவனத்தில் கொண்ட பணி அனுபவம் மற்றும் SN சுப்பிரமணியன் அவர்களுடன் கொண்ட பணி அனுபவத்தின் மூலம் சொல்கிறேன். அவர் தன்னுடைய பணியாளர்கள் அனைவரையும் ஒரு கூட்டு குடும்பமாகவே பார்க்கிறார்.

அவருடைய குழு உறுப்பினர்களுக்கு எப்போதும் மதிப்பளிக்கிறார் மற்றும் ஆதரவினை தருகிறார். அவருடைய நேர அட்டவணையில் ஊழியர்களுடன் பேசுவதற்கும், அவர்களுடன் செலவழிப்பதற்கும் நேரத்தை ஒதுக்குகிறார். SN சுப்பிரமணியன் அவர்கள் தன்னுடைய நிறுவனத்தின் ஊழியர்களின் நலனில் அக்கறை உள்ள ஒரு தலைவர். SN சுப்பிரமணியன் போன்ற தலைவர்கள் நேர்மறையான மாற்றத்தையும் நிலைத்த வளர்ச்சியையும் எடுத்துரைக்கிறார்கள். அவற்றை நாம் தவறாக புரிந்து கொள்வதற்கு பதிலாக அந்த முயற்சிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்” என கூறியுள்ளார். 

எல் அண்ட் டி நிறுவனத் தலைவர் SN சுப்பிரமணியன், “என்னுடைய நிறுவன ஊழியர்களை ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்ய சொல்ல முடியாது என்று வருந்துகிறேன். ஆனால் அப்படி செய்ய சொன்னால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். ஏனென்றால் நான் ஞாயிற்றுக்கிழமைகூட வேலை பார்க்கிறேன்.” என்று கூறி இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களுடைய விமர்சனங்களை வெளியிட்டனர். இதற்கு சமூக வலைதள பக்கத்தில் பதிலளித்துள்ள நடிகை தீபிகா படுகோனே, “இது போன்ற பெரிய பதவிகளில் இருப்பவர்கள் இது போன்ற அறிக்கைகளை வெளியிடுவது அதிர்ச்சியளிக்கிறது” என பதிவிட்டு இருந்தார். 

மேலும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா சிஇஓ அதார் பூனவல்லா, ஆர்பிஜி குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா மற்றும் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஆகியோர் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை குறித்த SN சுப்பிரமணியன் கருத்துக்கு விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது. 

90 Hours Job : 'இயந்திரத்துக்கே மெயின்டெனன்ஸ் நேரம் தேவை... மனிதர்களுக்கு வேண்டாமா?!'

'வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்' என்று எல் அண்ட் டி தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியம் பேசியிருந்த சர்ச்சை இன்னும் அடங்கவில்லை.இதற்கு பலர் தரப்பினர்களிடம் எதிர்ப்புகள் கிளம்பிக்கொண்டிருக்கும் ... மேலும் பார்க்க

90 Hours Work: '40, 48, 90 மணி நேரம் வேலை எல்லாம் வேண்டாம்...10 மணி நேரம் போதும்' - ஆனந்த் மஹிந்திரா

'வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். உங்களை (தொழிலாளர்களை) ஞாயிற்றுகிழமைகளில் வேலைக்கு வர வைத்தாலும் மகிழ்ச்சியடைவேன். எவ்வளவு நேரம் தான் நீங்கள் உங்கள் மனைவியை பார்த்துக்கொண்டு இருப்பீர்க... மேலும் பார்க்க

'StartUp' சாகசம் 6 : `ஊட்டச்சத்து பானம் டு லட்டு..!’ - பனங்கிழங்கும் விமலாம்பிகையும்

பனங்கிழங்கும் விமலாம்பிகையும்!'StartUp' சாகசம் 6தமிழ்நாட்டின் மாநில மரம் பனைதான். ஒரு பனையிலிருந்து ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெற... மேலும் பார்க்க

GRT: பொங்கலை பொன் பொங்கலாகக் கொண்டாடுவோம் - சிறப்பு சலுகைகளை அறிமுகம் செய்த ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்

1964ஆம் ஆண்டிலிருந்து, ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நகைத் துறையில் சிறந்து விளங்கும் அடையாளமாக திகழ்கிறது. தற்போது தனது 60வது ஆண்டைக் கொண்டாடும் இந்த நிறுவனம், தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக... மேலும் பார்க்க

`நான் பணக்காரர்; அடுத்தென்ன செய்வதென தெரியவில்லை' - $975 மில்லியன் நிறுவனத்தை விற்ற இந்திய வம்சாவளி!

வினய் ஹிரேமத் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் 975 மில்லியன் அமெரிக்க டாலருக்கு தனது நிறுவனத்தை விற்ற பிறகு ‘வாழ்கையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். இவர... மேலும் பார்க்க