பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னிலை: முதல்வர் ஸ்டாலின்
90 Hours Work: '40, 48, 90 மணி நேரம் வேலை எல்லாம் வேண்டாம்...10 மணி நேரம் போதும்' - ஆனந்த் மஹிந்திரா
'வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். உங்களை (தொழிலாளர்களை) ஞாயிற்றுகிழமைகளில் வேலைக்கு வர வைத்தாலும் மகிழ்ச்சியடைவேன். எவ்வளவு நேரம் தான் நீங்கள் உங்கள் மனைவியை பார்த்துக்கொண்டு இருப்பீர்கள்' என்று தொழிலாளர்கள் மத்தியில் L&T தலைவர் எஸ்.என் சுப்பிரமணியம் பேசியிருந்தது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்றில் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த மஹிந்திரா பேசியுள்ளார். அதில், "நாராயண மூர்த்தி மற்றும் பிறர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அதனால், அவர்கள் பேசியதை நான் தவறாக எடுத்துகொள்ளப் போவதில்லை. ஆனால், இந்த விவாதம் தவறான பாதையில் செல்கிறது என்று நான் நினைக்கிறேன்.
வாரத்திற்கு 48 மணி நேர வேலை.. .40, 70, 90 மணி நேரம் வேலை என்றெல்லாம் இல்லை. வெறும் 10 மணி நேர வேலையில் உலகை மாற்றலாம்.
நான் தனிமையாக இருப்பதால் எக்ஸ் பயன்படுத்துவதில்லை. என் மனைவியை பார்த்துக்கொண்டு இருக்க எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நான் அதிக நேரத்தைச் செலவிடுவேன்.
நண்பர்களை உருவாக்க நான் எக்ஸ் வலைதளத்தில் இல்லை. இதை என்னுடைய பிசினஸுக்கான கருவியாக பயன்படுத்துகிறேன்" என்று பேசியுள்ளார்.