சாம்பியன்ஸ் டிராபி: வங்கதேச அணி அறிவிப்பு! ஷகிப், லிட்டன் தாஸ் அதிரடி நீக்கம்!
பாதுகாப்புப் படையினரால் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் இன்று (ஜன.12) பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.
பிஜப்பூரின் இந்திரவதி தேசியப் பூங்காவின் எல்லைக்குட்பட்ட காடுகளில் இன்று (ஜன.12) காலை மாவட்ட ரிசர்வ் படை, சிறப்பு அதிரடிப் படை மற்றும் மாவட்ட காவல் துறையினர் இணைந்து நக்சல்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
அப்போது இருதரப்புக்கும் மத்தியில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்றது. தாக்குதல் நின்றபின்னர் நக்சல்கள் பதுங்கியிருந்த இடத்தில் சென்று பார்த்தப்போது 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க:543 மக்களவைத் தொகுதிகளிலும் கடவுச்சீட்டு சேவை மையம்!
கொல்லப்பட்ட 3 நக்சல்களும் அவர்களது படையின் சீருடையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடம் இருந்து துப்பாக்கிகளும் வெடிகுண்டுகளும் மீட்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், இந்தாண்டு நக்சல்களுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் தாக்குதல் நடவடிக்கைகளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.