சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 12) அறிவித்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபையில் நடத்த்தப்படவுள்ளன. மற்ற அணிகளுக்கான போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில், இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகிறது.
இதையும் படிக்க:ஒருவர் சதம், மூவர் அரைசதம் விளாசல்; அயர்லாந்துக்கு 371 ரன்கள் இலக்கு!
நியூசிலாந்து அணி அறிவிப்பு
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 12) அறிவித்துள்ளது.
15 பேர் கொண்ட இந்த நியூசிலாந்து அணிக்கு மிட்செல் சாண்ட்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வேகப் பந்துவீச்சாளர்களான லாக்கி ஃபெர்க்யூசன் மற்றும் பென் சியர்ஸ் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர்.
இதையும் படிக்க: இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; முகமது ஷமி அணியில் சேர்ப்பு!
வில்லியம் ஓ’ரூர்க் மற்றும் நாதன் ஸ்மித் இருவரும் முதல் ஐசிசி தொடரில் விளையாடவுள்ளனர். இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட ஜேக்கோப் டஃபி ரிசர்வ் வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான நியூசிலாந்து அணி விவரம்
மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவான் கான்வே, லாக்கி ஃபெர்க்யூசன், மாட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், வில்லியம் ஓ’ரூர்க், கிளன் பிளிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, பென் சியர்ஸ், நாதன் ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் வில் யங்.